மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு.
மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு.
அரசுப் பணிகளுக்கு பொது தகுதித் தேர்வு மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப்-ஏ மற்றும் குரூப்-பி உயர் பதவிப் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மத்திய அரசின் குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கு பல தேர்வு வாரியங்கள் மூலம் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஒரே அமைப்பின்மூலம் பொது தகுதி தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்ணை கொண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியங்களான ரயில்வே, எஸ்எஸ்சி, வங்கி பணியாளர் என அனைத்து தேர்வாணையத்தின் பணியிடங்களுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களை 3 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறிய அமைச்சர், குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அதனை உயர்த்திக் கொள்ளும் வகையில் இருமுறை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பொது தகுதி தேர்வு இணைய வழியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர், இதன் மூலம் குறுகிய காலத்தில் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.