இன்றைய ராசி பலன்கள் – 23-11-2019 சனிக்கிழமை

இன்றைய  ராசி பலன்கள் – 23-11-2019 சனிக்கிழமை

மேஷம்
உத்தியோகம் தொடர்பான பயணங்களும், அலைச்சல்களும் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : தனவரவு கிடைக்கும்.
கிருத்திகை : விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.
—————————————

ரிஷபம்
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய கவலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : கவலை உண்டாகும்.
மிருகசீரிஷம் : கவனம் தேவை.
—————————————

மிதுனம்
உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : நட்பு கிடைக்கும்.
புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.
—————————————

கடகம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உத்தியோகம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் மேம்படும். தொழில் அபிவிருத்திக்கான எண்ணங்களை செயல் வடிவமாக மாற்றுவீர்கள். சிறு தூர பயணங்களால் மாற்றமான சூழலும், மனதிற்கு இதமான நினைவுகளும் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் தோன்றும்.
பூசம் : முயற்சிகள் மேம்படும்.
ஆயில்யம் : மாற்றமான நாள்.
—————————————

சிம்மம்
விவாதங்களில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை அளிக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். மனகுழப்பங்களில் இருந்து தெளிவான சிந்தனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்திரம் : தெளிவு பிறக்கும்.
—————————————

கன்னி
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். நிலுவையில் இருந்துவந்த செயல்பாடுகளை செய்து முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். வாகனப் பயணங்களில் சற்று கவனம் வேண்டும். ஆடம்பர எண்ணங்களால் வீண் விரயமும் அதனால் நெருக்கடியான சூழலும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அஸ்தம் : பாராட்டப்படுவீர்கள்.
சித்திரை : கவனம் வேண்டும்.
—————————————

துலாம்
தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சில மாற்றங்களை செய்து முன்னேற்றம் காண்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : வெற்றி கிடைக்கும்.
விசாகம் : ஆதரவான சூழல் உண்டாகும்.
—————————————

விருச்சிகம்
முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றங்கள் சாதகமாக அமையும். பிறரிடமிருந்து எதிர்பார்த்த உதவிகளின் மூலம் பொருளாதாரம் மேம்படும். வேலையாட்களின் மூலம் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : அங்கீகாரம் கிடைக்கும்.
அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
கேட்டை : பொருளாதாரம் மேம்படும்.
—————————————

தனுசு
மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்து மனம் மகிழ்வீர்கள். பெரியோர்களின் வழிகாட்டுதல் மனதிற்கு தெளிவையும், உற்சாகத்தையும் அளிக்கும். சமூகப் பணியில் இருப்பவர்கள் மற்றவர்களுடன் உரையாடும்போது சற்று சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பிரவுன்
மூலம் : திறமைகள் வெளிப்படும்.
பூராடம் : தெளிவு கிடைக்கும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————

மகரம்
தாய்மாமன் வழி உறவுகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மனச்சோர்வும், குழப்பமும் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
திருவோணம் : மாற்றங்கள் உண்டாகும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
—————————————

கும்பம்
மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். கவனக்குறைவினால் அவப்பெயர்கள் நேரிடலாம். எடுத்துச் செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : குழப்பமான நாள்.
சதயம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
—————————————

மீனம்
வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். மாணவர்கள் இன்ப சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் நிமிர்த்தமாக சில மாற்றங்களை செய்து மனம் மகிழ்வீர்கள். நிர்வாக சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
ரேவதி : ஆலோசனை கிடைக்கும்.
——————————–

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...