இன்றைய முக்கிய செய்திகள்
கரூர்: தனியார் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில், 3வது நாளாக வருமான வரித்துறையினர் இதுவரை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஹாங்காங் போராட்ட களத்தில், முதன்முதலாக ராணுவத்தை களமிறக்கியது சீனா.
இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவை விட 1,42,847 வாக்குகள் வித்தியாசத்தில், சஜித் பிரேமதாச முன்னிலை. சஜித் பிரேமதாச 6,91,998 வாக்குகளும், கோத்தபய ராஜபக்சே 5,49,151 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தென்காசி: குற்றால மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு.
சேலம் – ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு. தாய் சந்திரா(40), மகள் நித்யா(18), மகன் சக்திவேல்(16) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச. இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவைப் பாராட்டுகிறேன். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் காயமடைந்த அனுராதாவிற்கு, ₨.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அனுராதாவிற்கு செயற்கை கால் பொறுத்துவதற்கான முழு செலவையும் திமுக ஏற்கும் எனவும் ஸ்டாலின் அறிவிப்பு.
நாளை மறுநாள் காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம். புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, மாநில தகவல் ஆணையர் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை.
அயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு. லக்னோவில் நடைபெற்ற அனைத்து இந்திய முஸ்லீம் தனி சட்ட வாரிய ஆலோசனை கூட்டத்தில் முடிவு.