இன்றைய முக்கிய செய்திகள்

 இன்றைய முக்கிய செய்திகள்

கொடநாடு கொலை வழக்கில் கைதான சயன் மீதான குண்டர் சட்டம் செல்லாது.. சயன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடன ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

வண்டலூரில் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் சரண்.

வரத்து குறைவு காரணமாக உளுந்து, துவரம் பருப்பு விலை கடும் உயர்வு!

சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.29,264க்கு விற்பனை.

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம். காவல்துறையினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்த அர்ஜூன் சம்பத் கைது செய்து தஞ்சை காவல்துறை நடவடிக்கை

டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் அல்வர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், போலீசார் இடையே மோதல் – நீதிபதி அறையில் இருந்த வழக்கறிஞர்கள், 2 பேரை கைது செய்ததால் பதட்டம்.

சென்னையில் உள்ள 12 ஏரிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. டிசம்பர் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...