இன்றைய முக்கிய செய்திகள்
திமுகவில் உதயநிதிக்கு தரப்படும் முக்கியத்துவம் பிற பிற இளைஞர்களுக்கு கிடைக்குமா…? கனிமொழிக்கு தரப்பும் கவனிப்பு மற்ற பெண்களுக்கு கிடைக்குமா…? -நமது அம்மா நாளிதழ் விமர்சனம்
ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு. வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் ஈடுபட்ட சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி. சரணடைந்த சுரேஷை 15 நாள் விசாரிக்க தனிப்படை அனுமதி கேட்ட நிலையில், 7 நாள் அனுமதி அளித்தது திருச்சி நீதிமன்றம்.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.நியமிக்கப்பட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை. வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படவுள்ள நிலையில் ஆலோசனை.
கரூர்: வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வாழ்வார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.
புதுச்சேரியில் மீனவர்களிடையே மோதல்: கிராமங்களில் 144 தடை உத்தரவு. புதுச்சேரி அருகே மீனவர்கள் மோதலில் ஈடுப்பட்ட வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் பிரவீன், தந்தை சரவணன், ராகுல், தந்தை டேவிஸ் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது தேனி நீதிமன்றம்.