டெங்கு காய்ச்சல் – அவசரம்
டெங்கு காய்ச்சல் – அவசரம்
புரட்டாசி மாசம் தொடங்கிவிட்டது. இன்னும் சில பருவநிலை மாற்றம். இதற்காக ஒரு சிலர் அசைவம் எடுத்துக் கொள்ளாமல் சைவம் சாப்பிடுவார்கள். இதனால் பருவ மாற்றத்தின் விளைவுகளை உடம்பு ஏற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
தற்போது மழை பெய்யும் பருவம் ஆரம்பித்துவிட்டது. தற்பொழுது சளி, இருமல், தலைவலி, ஜுரம் போன்ற உபாதைகளும் கூடவே தொடங்கிவிடும். தற்போது டெங்கு காய்ச்சல் வருவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளதால், நிலவேம்பு கசாயம் கண்டிப்பாக வாரத்துக்கு இரு முறை எடுத்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். சில விஷயங்கள் வருவதற்கு முன்னால் காத்துக் கொண்டால், நமது உடல் வலி மற்றும் நம்முடைய நேரம், உழைப்பு, பணம் அனைத்தும் மிச்சமாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
நிலவேம்பு கசாயம் எடுத்து டெங்கு சாய்ச்சலை விரட்டுவோம்…