ஹாலிவுட் தரத்தில் உருவாகிவரும் விடா முயற்சி! | தனுஜா ஜெயராமன்

 ஹாலிவுட் தரத்தில் உருவாகிவரும் விடா முயற்சி! | தனுஜா ஜெயராமன்

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அஜித்துக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது துணிவு. துணிவு திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு, 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால் அஜித்தின் ஏகே 62 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதன்படி லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிறது ஏகே 62. விடாமுயற்சி என்ற டைட்டிலில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால், எதிர்பாராதவிதமாக விடாமுயற்சி படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனால் சோகத்தில் இருந்த விடாமுயற்சி படக்குழு, தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறது. மேலும் மிலன் உயிரிழந்ததால், தற்போது அவரது மனைவியை ஆர்ட் டைரக்டராக பணியாற்றவுள்ளாராம்.

அஜர்பைஜான் நாட்டில் உருவாகும் விடாமுயற்சி, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும், அதனால் விடாமுயற்சி ஷூட்டிங் முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெறும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...