இன்றைய ராசி பலன் (செவ்வாய்க்கிழமை 12 செப்டம்பர் 2023)

 இன்றைய ராசி பலன் (செவ்வாய்க்கிழமை 12 செப்டம்பர் 2023)

சோபகிருது வருடம் ஆவணி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 12.9.2023, சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 02.01வரை துவாதசி . பின்னர் திரியோதசி. இன்று முழுவதும் ஆயில்யம். பூராடம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் :  படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப திட்டமிடுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களோடு இணக்கமாக இருப்பீர்கள். அடுத்தவரின் பிரச்சனைக்காக மனம் வருந்துவீர்கள். தந்தையின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை அடைக்க கஷ்டப்பட்டு வேலை பார்ப்பீர்கள்.

ரிஷபம் : நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருளை நிச்சயமாக வாங்குவீர்கள். அடுத்து கெடுக்க நினைப்பவர்களை கொடுத்து மனம் குளிர வைப்பீர்கள். வேலை இடத்தில் இருந்த பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தாண்டுவீர்கள். உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர சகோதரிகள் வீடு கட்டுவதற்காக உதவி செய்வீர்கள்.

மிதுனம் :  பொதுச் சேவைகள் மூலமாக புகழடைவீர்கள். ஊழியர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பணி நிமித்தமான பயணங்களில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். கலகலப்பாக பேசி காதலியின் மனதை கவருவீர்கள். பெட்டிக்கடை வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள். வங்கி கடன்களை குறைப்பீர்கள்.

கடகம் : தாயார் வீட்டுக்குச் செல்லும் மனைவியைத் தடுக்காதீர்கள். கம்பெனியில் கணக்கு வழக்குகளை சரியாகக் காட்டுங்கள். வெளியூர் பயணங்களின் போது தேவையற்ற பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். வியாபாரம் குறித்து கவலைப்படாதீர்கள். கடுமையாக உழைத்து உற்பத்தியை பெருக்குவீர்கள். எதிர்காலம் கருதி பொறுமையுடன் இருப்பீர்கள்.

சிம்மம் : பெண்களிடம் நெருக்கம் காட்டி சிக்கலில் மாட்டிக் மாட்டிக் கொள்ளாதீர்கள். உறவினர்களிடம் அந்தஸ்தை உயர்த்தி காட்ட கடுமையாக செலவு செய்வீர்கள். மன வருத்தம் காரணமாக குடும்பத்தை பிரிந்து செல்வீர்கள். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி காயப்படுத்தி கொள்ளாதீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டம் போட்டு அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்குவீர்கள்.

கன்னி : எதிர்பாராத வகையில் தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். மளமளவென்று பணவரவை அதிகரிப்பீர்கள். விறுவிறுப்பாக வியாபாரம் செய்வீர்கள். அரசு வேலையில் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். பிரியமான பெண்களின் உதவியை பெறுவீர்கள். தொழிலில் ஏற்றமடைந்து இரு மடங்கு லாபத்தை காண்பீர்கள்.

துலாம் : பேச்சுத் திறமையால் பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த நண்பர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். கையிருப்பை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த வில்லங்கங்களைத் தீர்ப்பீர்கள்.

விருச்சிகம் : வேலையிடத்தில் சக ஊழியர்களால் சங்கடத்தை சந்திப்பீர்கள். குதர்க்கமாக பேசும் மனைவியால் மனக்காயப்படுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்காமல் வருத்தப்படுவீர்கள். பிள்ளைகளின் பிரச்சினைக்காக கல்லூரிக்குச் செல்வீர்கள். எதிர்பார்த்த பணம் வராததால் வியாபாரத்தை விரிவுபடுத்த முடியாமல் தடுமாற்றம் அடைவீர்கள்.

தனுசு  :   நல்லதை செய்தாலும் சகோதரிகளை திருப்திப்படுத்த இயலாமல் சங்கடப்படுவீர்கள். கையில் வைத்திருக்கும் பணத்தை கவனமாகக் கையாள தவறாதீர்கள். வீட்டை விட்டு வெளியேறும் போது பூட்டை இழுத்துப் பார்த்து விட்டுச் செல்ல மறக்காதீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாதீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையாக இருங்கள்.

மகரம் : சிறிய வேலை என்றாலும் பெரிய அக்கறையோடு செய்வீர்கள். பெற்றோர்களின் பாராட்டால் உச்சி குளிர்ந்து போவீர்கள். உறவுகளை தேடிச் சென்று உதவுவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வியாபாரிகள் அதிக பலன்களை அடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள். கடுமையாக இருந்த கால் வலிக்கு தீர்வு காண்பீர்கள்.

கும்பம் : ஆடல் பாடல் என்று ஆடம்பரங்களில் மனம் நாட்டம் கொள்வீர்கள். தேவையில்லாத பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். இவனால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தவர்கள் முகத்தில் கரியைப் பூசுவீர்கள். தொழிலில் மேன்மையடைந்து எதிரிகளை பொறாமைப்பட வைப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களில் சோர்வடையமாட்டீர்கள்.

மீனம் : உங்கள் மனம் புண்பட பேசுபவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வீண் விரயங்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பிரச்சனையை தீர்க்க பாடுபடுவீர்கள். மனைவியின் கோபத்தால் மன வேதனைப்படுவீர்கள். பொறுமையைக் கடைபிடியுங்கள். உங்கள் முன்னேற்றத்தை கெடுக்க கூட இருப்பவர்கள் குழி பறிக்கிறார்கள். அலட்சியமாக நடந்து கொள்ளாதீர்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...