இந்த நாள் இனிய நாள் இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை 04 செப்டம்பர் 2023)

சோபகிருது வருடம் ஆவணி மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 4.9.2023. சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.01 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 12.38 வரை பஞ்சமி. பிறகு சஷ்டி. இன்று மாலை 03.39 வரை அஸ்வினி. பிறகு பரணி. உத்திரம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் : செல்வாக்கை காப்பாற்றிக்கொள்ள சிரமப்படுவீர்கள். மனைவியோடு மல்லுக்கட்டாதீர்கள். உங்கள் மரியாதையை இழப்பீர்கள். பொருளாதார நெருக்கடியால் கைநீட்டி கடன் வாங்குவீர்கள். காதல் வலை வீசும் பெண்களிடம் ஏமாந்து விடாதீர்கள். சிலருக்கு கிட்னி பிரச்சனை ஏற்பட்டு வலியால் சிரமப்படுவீர்கள். சிறிய விபத்துகளில் சிக்குவீர்கள்.

ரிஷபம் : வியாபாரத்தில் திடீர் சறுக்கலை அடைவீர்கள். கூட இருந்தவரே உங்களை ஏமாற்றி விட்டு செல்லக்கூடிய நிலைக்கு ஆளாவீர்கள். இனிக்க இனிக்க பேசும் பெண்களிடம் பல்லைக் காட்டி ஏமாந்து விடாதீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்துக்கு பங்கம் ஏற்பட்டு அவமானத்தால் தலை குனிவீர்கள். தேவைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.

மிதுனம் :  அரசாங்க அதிகாரிகளுக்கு அதிர்ஷ்டமிக்க காரியங்கள் நடந்து மகிழ்ச்சியில் பிழைப்பார்கள். பொருளாதாரம் முன்னேற்றமடைந்து புகழும் செல்வாக்கும் அடைவீர்கள். வயிற்றுக்கோளாருக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வீர்கள். புதிய வீடு வாங்குவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். நீங்கள் வீசும் காதல் வலையில் விரும்பும் பெண்ணை வீழ்த்துவீர்கள்.

கடகம் : அரசியல்வாதிகள் மக்களிடம் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலமாக உறவினர் மத்தியில் மரியாதையை அடைவீர்கள். நீங்கள் விரும்பும் பெண்ணை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். கடுமையாக உழைத்து கையிருப்பை அதிகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்டவசமாக சிலர் அரசாங்க வேலையில் சேருவீர்கள்.

சிம்மம் : திட்டம் போட்டு எதிரிகள் உங்களை வீழ்த்த நினைத்தாலும் அதை சமாளிப்பீர்கள். வயிற்றுக் கோளாறுக்காக கணிசமான மருத்துவ செலவு செய்வீர்கள். காதல் விவகாரங்களில் கவனமாக நடந்து கொள்ளாவிட்டால் பஞ்சாயத்தில் மாட்டிக் கொள்வீர்கள். செல்லாமல் போன காசோலை பிரச்சனைக்காக காவல் நிலையம் செல்வீர்கள்.

கன்னி : தொழில் துறைகளில் புது முயற்சியில் ஈடுபட்டால் பொருளாதார நஷ்டம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் சட்ட சிக்கலில் மாட்டி அவதிப்படுவீர்கள். வியாபாரத்தில் கடுமையான போட்டிகளை கடந்து வருவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு குறைவை அடைவீர்கள். வெளியூர் பயணத்தில் கைப்பொருளை கவனமாக கையாளத் தவறாதீர்கள்.

துலாம் திடீர் பண வரவால் திக்கு முக்காடி போவீர்கள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மக்கள் மத்தியில் மரியாதையை அதிகரிப்பீர்கள். நீங்கள் விரும்பும் பெண்ணை வசீகர வார்த்தைகளால் வளைத்து பிடிப்பீர்கள். வியாபாரிகள் விற்பனை அதிகரித்து பொருளாதாரத்தை பெருக்குவீர்கள். ஆடம்பரமாக செலவு செய்து அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள்.

விருச்சிகம் : ஆடல் பாடல் என்று அனைத்து துறையிலும் வெற்றிக்கொடி நாட்டு வீர்கள். வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக பயணிக்க மறக்காதீர்கள். விபத்தில் சிக்கி ரத்த காயம் படுவீர்கள். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். கடன்களை அடைப்பீர்கள். உங்களின் வளவள பேச்சால் காதல் முறிந்து காதலித்தவள் பிரிந்து போகும் நிலையை ஏற்படுத்துவீர்கள்.

தனுசு  :   மனக்கவலை அதிகரித்து தூக்கம் கெடுவீர்கள். தடுமாற்றமாக காரியம் செய்து தடம் மாறி செல்வீர்கள். காதலித்த பெண்ணுக்கு கணிசமாக செலவு செய்வீர்கள். வியாபாரம் அந்த நிலை குறித்து சிந்திப்பீர்கள். திடீரென்று நோய்வாய்ப்பட்டு பிள்ளைகளை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். வெளியில் போகும்போது வீட்டை பூட்டி செல்ல மறக்காதீர்கள்.

மகரம் :  வாழ்க்கையில் வசந்தம் வீசுவதால் மகிழ்ச்சியோடு நடமாடுவீர்கள். பெண்களின் மயக்கும் வார்த்தைகளில் மனம் சொக்கி போவீர்கள். அனைத்து துறையிலும் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். தொழில் போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். உங்களின் பேச்சை கேட்காத உறவுகளை ஒதுக்கி தள்ளுவீர்கள். உடலில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றுவீர்கள்.

கும்பம் : ஊர் மக்களிடம் உங்கள் பெயர் கொடி கட்டி பறக்கும் படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தைக் கொண்டு வீட்டு மனை வாங்குவீர்கள். நீண்ட காலமாக நினைத்த பெண்ணின் மனதில் நிரந்தரமாக இடம் பிடிப்பீர்கள். சொத்தில் பங்கு வேண்டும் என்று சொந்த சகோதரர் போட்ட சண்டைக்கு முடிவு காண்பீர்கள். தங்க நகைகளை வாங்கி மனைவியை மகிழ்விப்பீர்கள்.

மீனம் : தொட்ட காரியம் எல்லாம் தடையில்லாமல் நடந்து சந்தோஷத்தில் திளைப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்களுடைய அந்தஸ்து அதிகரித்து மற்றவர்களால் போற்றப்படுவீர்கள். அவசியமான நேரத்தில் நெருங்கிய பெண் நண்பரிடம் பண உதவி பெறுவீர்கள். சகோதரியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!