இன்றைய ராசி பலன் (செவ்வாய் 08 ஆகஸ்டு 2023)

 இன்றைய ராசி பலன் (செவ்வாய் 08 ஆகஸ்டு 2023)

மேஷம் : இன்று மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். அதை விலக்கி நேர்மறை எண்ணங்களை கொள்வது உங்களுக்கு நல்லது. குறைந்த அளவு பண வரவே இருக்கும். பண இழப்புகள் ஏற்படலாம். ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க முடியாது.

ரிஷபம் : இன்று நீங்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். சில அசௌகரியங்கள் காணப்படும். எதிலும் திட்டமிடல் அவசியம். அதிகரிக்கும் செலவுகளால் கவலை ஏற்படும். திட்டமிட்டு கவனமாக பணத்தை செலவு செய்ய வேண்டியது அவசியம். உங்களுக்கு சளித் தொல்லை ஏற்படலாம். குளுமையான பொருட்களை தவிர்க்க வேண்டும்.

மிதுனம் : இன்று நடப்பவை எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியையே தரும். இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். தொலைக்காட்சி மற்றும் பாடல்கள் கேட்டல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நிதிநிலைமையில் வளர்ச்சி காணப்படும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். நீங்கள் மிகவும் உற்சாகத்தடன் காணப்படுவீர்கள்.

கடகம் : நீங்கள் இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொலைதூரத்திலிருந்து நற்செய்திகள் வரும். உங்களுக்கு தாராளமான பண வரவு இருக்கும். இன்று நீங்கள் சிறந்த வேலைக்கான ஊக்கத்தொகையை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நடப்பவற்றை இலேசாக எடுத்துக்கொண்டு உணர்ச்சி வசப்படாமல்இருக்க வேண்டும். அது உங்களின் சிறந்த ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

சிம்மம் : ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு அமைதியை பெற்றுத் தரும். இன்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்க கஷ்டப்படுவீர்கள். உங்கள் பணம் விரயமாகும். மன அழுத்தம் காரணமாக தலைவலி உபாதைக்கு ஆளாவீர்கள். அது உங்களுக்கு கவலை தரும்.

கன்னி : இன்று நீங்கள் பல தடைகளைக் கடந்த பிறகு உங்கள் செயல்களில் திருப்தி அடைவீர்கள். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது கவனத்தை கையாளவும். கவலைகளை ஒதுக்கி மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். அதிக அளவில் செலவுகள் ஏற்படும். உங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும். அதனால் உங்களுக்கு பணவிரயம் ஏற்படும்.

துலாம் : இன்று நீங்கள் சில அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்கலாம். நல்ல முடிவுகளை எடுப்பதற்கான சமமான மன நிலையைப்பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் தரம் சிறந்த முறையில் இருப்பதற்கான சில கொள்கைகளையும் நோக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உங்கள் சேமிப்பு உயர வாய்ப்பு இருக்கின்றது. நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். நிறைந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.

விருச்சிகம் : இன்று முன்னேற்றமான நிலையைக் காண்பீர்கள். குறைந்த முயற்சியில் பெரிய விஷயங்களை சாதிப்பீர்கள். நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பீர்கள். நிதிநிலையைப் பொறுத்தவரை சாதகமான நிலை உள்ளது. சேமிக்க வேண்டும் என்ற உத்வேகம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். நல்ல திடமான ஆரோக்கியத்தை நீங்கள் பராமரிப்பீர்கள்.

தனுசு : இன்று உங்கள் மனதில் தேவையற்ற கவலைகள் காணப்படும். அவற்றை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது உங்களுக்கு நல்லது. உங்களுக்கு நிதி நிலையைப் பொறுத்தவரை அனுகூலமாக இல்லை. இன்று பயணத்தின் போது பண இழப்புகளால் ஏமாற்றங்களை சந்;திப்பீர்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும். ஜீரணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும்.

மகரம் : உங்கள் எண்ணங்களை சரியான வார்த்தை வடிவில் வெளிப்படுத்தாதன் காரணமாக இன்று நீங்கள் சில பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். இன்று நீங்கள் பொறுமை கடைபிடிப்பது மிகவும் அவசியம். மனதில் தோன்றும் தேவையற்ற கவலைகளை நீக்கி விடுங்கள்.  உங்களுக்கு நிதி நிலையைப் பொறுத்தவரை அனுகூலமாக இல்லை. செலவுகள் அதிகமாக இருப்பதாலல் சேமிக்க இயலாது. நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். மனதில் பதட்டம் காணப்படும்.

கும்பம் : இன்று நீங்கள் சற்று மந்தமாக காணப்படுவீர்கள். இதனால் பல வாயப்புகளை நீங்கள் இழப்பீர்கள். எனவே இன்றைய நாளை நிர்வகிக்க திட்டமிடல் வேண்டும். கூடுதல் செலவுகள் ஏற்படலாம். உங்களிடம் இன்று பணம் இருந்தாலும் அதில் நீங்கள் திருப்திஅடையமாட்டீர்கள். அஜீரணக் கோளாறுகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். உணவில் கட்டுப்பாட்டுடன் இருங்கள். ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.

மீனம் : உங்கள் வளர்ச்சியில் சில தடைகளைக் காண்பீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்கு சிறந்த திட்டமிடல் வேண்டும். அதிகம் உணர்ச்சி வசப்படாதீர்கள். அதிகமாகச் செயலாற்றுங்கள். நிதிநிலையைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமான நாள். மிக விரைவாக இன்று நீங்கள் பணம் சம்பாதித்து அதன் மூலம் திருப்தியடையும் வாய்ப்பு உள்ளது. திடமான ஆரோக்கியத்துடனும் நேர்மறை எண்ணங்களுடனும் காணப்படுவீர்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...