உலகநாயகனுக்கு மீண்டும் வில்லனாகிறார் விஜய்சேதுபதி

 உலகநாயகனுக்கு மீண்டும் வில்லனாகிறார் விஜய்சேதுபதி

உலக நாயகன் கமல் ஹாசனின் KH.233 படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிப்பார் என தகவல் அஜித் குமாரை வைத்து துணிவு படத்தை எடுத்து ரிலீஸ் செய்த H.வினோத் அடுத்ததாக உலக நாயகன் கமல் ஹாசனின் KH.233 படத்தை இயக்குகிறார்.அந்த படத்தில் கமல் ஹாசனை விவசாயியாக காட்டப் போகிறாராம் H.வினோத் ஸ்க்ரிப்ட்டை படித்துப் பார்க்க கமல் ஹாசன் அதில் சில மாற்றங்களை செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளாராம். ஆண்டவர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது என்று அவர் சொன்ன விஷயங்களை திருத்திக் கொண்டிருக்கிறாராம் வினோத்.

H.வினோத் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் KH.233 என்று விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் படவிருக்கிறதாம். இந்நிலையில் வினோத் படத்தில் கமலுக்கு யார் வில்லனாக நடிப்பார் என்கிற கேள்வி எழுந்தது. கமலுக்கு ஏற்ற கெத்து வில்லனாக இருக்க வேண்டும் என்றார்கள் ரசிகர்கள். அவர்களின் விருப்பம் நிறைவேறிவிட்டது. வினோத் படத்தில் கமல் ஹாசனுடன் மோதப் போவது வேறு யாருமல்ல மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான்.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் கொடூர வில்லனாக வந்து மிரட்டினார் விஜய் சேதுபதி. இந்நிலையில் மீண்டும் கமலுக்கு வில்லனாகப் போகிறாராம்.H.வினோத், கமல் ஹாசன் கூட்டணி சேர்ந்திருக்கும் KH.233 படத்திற்கு ஆண்டவரின் மனம் கவர்ந்த ஜிப்ரான் தான் இசையமைக்கப் போகிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் கமல் ஹாசன் மற்றும் வினோத் படங்களில் ஏற்கனவே பணியாற்றியிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. அந்த வேலை முடிந்ததும் வினோத் பட ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கமல் ஹாசனை விவசாயியாக பார்த்து பல காலம் ஆகிவிட்டது. அதனால் வினோத் படத்தில் பழைய கமலை பார்க்கலாம் என்கிற சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...