இன்றைய ராசிபலன் 18.06.2023
மேஷ ராசி அன்பர்களே!
இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உற்சாகமும் கேளிக்கையும் நிறைந்திருக்கும். திரைப்படங்கள் பார்த்தல், பாடல்கள் கேட்டல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.உங்களது இனிமையான வார்த்தைகளின் மூலம் உங்கள் துணையுடன் நல்ல புரிந்தணர்வை ஏற்படுத்திக்கொள்வீர்கள்.இதனால் இருவருக்கும் இடையிலான உறவில் திருப்தி கிடைக்கும்.இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே!
இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. நெகிழ்வான அணுகுமுறை உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் அன்றாட நிகழ்வுகளில் தாமதங்கள் ஏற்படும். அது உங்களுக்கு கவலையை அளிக்கும்.அதிக வேலைப்பளு காரணமாக நீங்கள் இன்று தலைவலியால் பாதிக்கப்படுவீர்கள்.உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதால் நீங்கள்பேசும் போது கவனமுடன் பேச வேண்டும்.
மிதுன ராசி அன்பர்களே!
இன்று சிறப்பான நாளாக அமையாது. இன்றைய நாளை திட்டமிட வேண்டும். இன்று சில சௌகரியங்களை இழக்க நேரலாம். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள் அல்ல.இன்று வீணான செலவுகள் காணப்படும்.இன்று கண்களில் எரிச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.குடும்ப விஷயம் காரணமாக உங்கள் துணையுடன் சிறிய கருத்து மோதல்கள் காணப்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பீர்கள்.
கடக ராசி அன்பர்களே!
இன்று செயல்பாடு குறைவாக காணப்படும். இன்று உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். குழப்பமான மனநிலை காணப்படும்.நீங்கள் தோல் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்.எண்ணெய் பதார்த்தங்களை உட்கொள்வதை தவிர்க்கவும்.போதிய பணம் சேமிக்க நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உங்கள் பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிப்பதற்கு நீங்கள் சரியாக திட்டமிட வேண்டும்.
சிம்ம ராசி அன்பர்களே!
மிகுந்த முயற்சியின் மூலம் இன்றைய தினத்தை சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம். இன்று பணம் அதிக அளவில் காணப்படும். அதை நீங்கள் ஆக்கப்பூர்வமான காரியத்திற்கு செலவு செய்வீர்கள்.உங்கள் குடும்பத்தில் நடைபெறவிருக்கும் ஒரு விசேஷம் பற்றி உங்கள் துணையுடன் விவாதிப்பீர்கள். உங்கள் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கன்னி ராசி அன்பர்களே!
இன்று சிறப்பான நாள். இன்று நீங்கள் உங்களைச் சுற்றி இருக்கும் வேலைகளில் மிகவும் மும்மரமாக காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிகளில் நற்பலன்களைப் பெற நீங்கள் இன்று புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்..புதிய முதலீடு போன்ற முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.இன்று ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.உங்கள் செயல்பாட்டின் மூலம் மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும்.
துலா ராசி அன்பர்களே!
இன்று அதிகமான செயல்பாடுகள் காணப்படாது. இன்று உங்கள் நிலையில் கட்டுப்பாட்டை இழந்து காணப்படுவீர்கள்.இன்று நற்பலன்களைக் காண பொறுமை மிகவும்அவசியம். மனக்குழப்பங்களுக்கு ஆளாகாதீர்கள்.இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும்.உங்கள் நம்பிக்கையான மனப்போக்கின் காரணமாக உங்கள் துணையுடன் நல்லுறவைப் பேணுவீர்கள்.போதுமான பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு.
விருச்சிக ராசி அன்பர்களே!
இன்றைய தினம் நற்பலன்களை அளிக்கும் வகையில் சாதகமாக அமையாது. பலன்கள் மெதுவாகக் கிடைக்கும். இன்றைய தினம் அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் வெற்றி காணலாம்.உங்கள் பணிகளை இன்று திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம்.இன்று விலைமதிப்பு மிக்க பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.இன்று இறுக்கமான மனநிலையுடன் காணப்படுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே!
இன்று சிறப்பான நாளாக காணப்படும். உங்கள் இலட்சியங்களில் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள்..உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.இன்று பணவரவு சிறப்பாக காணப்படும்.இன்று அதிர்ஷ்டமான நாள்.உங்கள் சேமிப்பு உயரும்.உங்கள் துணையுடன் நல்ல தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
மகர ராசி அன்பர்களே!
இன்று சாதாகமான நாளாக இருப்பதை காண்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் இன்று நிறைய சாதிப்பீர்கள்.இன்று உங்கள் வளர்ச்சிக்கு உதவும் புதுமையான கருத்துக்களை கொண்டிருப்பீர்கள்.அதற்கு முயற்சி எடுப்பீர்கள்.உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வீர்கள்.இன்று சுமுகமான சூழ்நிலையும் நல்லிணக்கமும் காணப்படும்..உங்கள்தரமான பணிகள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும்.
கும்பராசி அன்பர்களே!
இன்று மன அழுத்தம் காரணமாக அசௌகரியங்கள் காணப்படும்..இன்று தேவையில்லாத செலவுகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.உங்கள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது இறுக்கமாக உணர்வீர்கள்.இன்று திட்டமிட்டு அதன்படி வேலை செய்வதன் மூலம் வளர்ச்சி காணலாம்.உங்கள் துணையுடன் சில சச்சரவுகள் காணப்படும். கருத்து வேறுபாடுகள் காணப்படும்.மனஅழுத்தத்தைக் குறைக்க இசையை கேளுங்கள் அல்லது திரைப்படங்களைப் பாருங்கள்.அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
மீனராசி அன்பர்களே!
இன்று வளர்ச்சியில் தடைகள் காணப்படும்.உங்கள் துணையுடனான உறவில் அதிருப்தி நிலவும்.தொடர்பாடலில் உள்ள குறைபாடு காரணமாக உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும்.இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.இன்று கூடுதல்பொறுப்பு காரணமாக அதிக செலவினங்கள் காணப்படும்.அதிர்ஷ்டத்தை நம்புவதை விட கடின உழைப்பை நம்புங்கள்.நீங்கள் சவால்களைத் தாண்டி சமாளிப்பீர்கள்.