திருமணத்திற்குத் தேவையான முக்கிய பொருத்தங்கள்?
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அந்தத் திருமணத்தை தகுந்த மண மகன், மணமகளைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்விக்க வேண்டும். அப் போதுதான் அவர்கள் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி வாழமுடி யும். அதற்கு ஜோதிடம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜாதக ரீதியாகப் பொருந்துகிற வரன் அமைந்தால் நிச்சயம் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது காலகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஜோதிடத்தில் பொருத்தங்கள் உள்ளன. அந்தப் பொருத்தங்களுக்கு ஏற்ப ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்விக்கவேண்டும். அது எப்படி? எந்தப் பொருத்தங்கள் இருந்தால் போதும் என்று பார்ப்போம்.
ஜோதிடத்தில் சொல்லப்பட்ட பொருத்தங்கள் அனைத்துமே மணமகன், மண மகள் இருவரின் உடல்கூறு சம்பந்தமான பொருத்தங்கள்தான். கீழ்க்காணும் பொருத்தங்கள இருந்தால் திருமணம் செய்யலாம் என்பது ஜோதிட விதி முறையாகும். குறிப்பாகச் சொல்லப்போனால்
1. தினப்பொருத்தம் – ஆயுள் உடல் சம்பந்தமானது, 2. கணப்பொருத்தம் – இருவர் மகிழ்ச்சியாக இருப்பது, 3 மகேந்திரப் பொருத்தம் – குழந்தைச் செல்வம் சம்பந்தமானது, 4 ஸ்திரீ தீர்க்கப் பொருத் தம் – செல்வச் சிறப்பைக் குறிக்கும், 5 யோனிப் பொருத்தம் –ஆண், பெண் உடலுறவால் மகிழ்ச்சியைப் பெறுவது, 6. வசியப் பொருத்தம் – மனஒற்றுமையைக் குறிக்கும், 7. ராசி அதிபதி பொருத்தம் – ஆண், பெண் பெற்றோர்களின் நட்பு சம்பந்தமானது,
8 வசியப்பொருத்தம் – இவருவரின் மன, உடல் ஒற்றுமையைக் குறிக்கும், 9 ரஜ்ஜுப் பொருத்தம் – ஆணின் ஆயுளையும் பெண்ணின் மாங்கல் யத்தையும் குறிக்கும், 10. வேதைப் பொருத்தம் – சுகமான மகிழ்ச்சியைத் தரும், 11. நாடிப் பொருத்தம் – மத்திய நாடியாகில் பெண்ணுக்கும், தக்ஷிண, வாம, பார்சுவ நாடியாகில் ஆணுக்கும் தோஷமாகும். 12. மரப் பொருத்தம் -குழந்தைச் செல் வத்தைத் தருவதாகும்.
மேற்கண்ட பொருத்தங்களில் 1. கணம், 2. மகேந்திரம், 3. யோனி, 4. வசியம், 5. மரம், 6. நாடி, 7. ரஜ்ஜு ஆகிய ஏழு பொருத்தங்கள் பொருந்தியிருந்தாலே திரு மணம் செய்விக்கலாம். இதைத் தவிர்த்து, என் அனுபவத்தில் கண்ட வழி முறை யில் இரத்த குரூப் சம்பந்தமான பொருத்தம் சரியாக இருந்தாலும் திருமணம் செய்யலாம்.
இரத்த குரூப் வகைகள் O+ to O+/ B+ to B+/ A1+ to O+, A1+/ O- to B-/ B- to B-
இந்த வகையிலும் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்யலாம். செவ்வாய் தோஷம் என்பது இரத்த ஓட்டத்தைக் குறிப்பதாகும். செவ்வாய் தோஷத்துக் கென்று பரிகாரம் செய்ய வேண்டியதில்லை.