வரலாற்றில் இன்று – 10.01.2021 குருதயாள் சிங்
பிரபல பஞ்சாப் இலக்கியவாதி குருதயாள் சிங் 1933ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பாயினி ஃபதேஹ் என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர் 1957ஆம் ஆண்டு பாகன்வாலே என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். இவர் சகி பூல், குட்டா தே ஆத்மி, பெகனா பிந்த் உள்ளிட்ட 12 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
பத்மஸ்ரீ, ஷிரோமணி சாஹித்கார், பஞ்சாப் சாகித்ய அகாதமி விருது, சோவியத் லாண்ட் நேரு விருது உள்ளிட்ட ஏறக்குறைய 17 விருதுகளையும் பெற்றுள்ளார். ஞானபீட விருது பெற்ற இவர் 2016ஆம் ஆண்டு மறைந்தார்.
கரோலஸ் லின்னேயஸ்
இன்று இவரின் நினைவு தினம்..!
நவீன வகைப்பாட்டியலின் தந்தை கரோலஸ் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் பிறந்தார்.
இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பிறகு தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார்.
புதுவகை தாவரங்களைக் கண்டறிந்து ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை எழுதினார். இவரது சிஸ்டம் ஆஃப் நேச்சர் நூல் 1735ஆம் ஆண்டு வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1753ஆம் ஆண்டு இயற்கை அறிவியல் களத்தில் மாஸ்டர் பீஸ் எனக் குறிப்பிடப்பட்ட பிளான்ட் ஸ்பீசிஸ் நூலில் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்துக்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார்.
தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் கரோலஸ் லின்னேயஸ் 1778ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1863ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
1940ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தார்.
1920ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.