கிருஷ்ண ஜெயந்தி | பூஜைக்கான நேரம்

 கிருஷ்ண ஜெயந்தி | பூஜைக்கான நேரம்

கிருஷ்ண ஜெயந்தி 2020 எப்போது, பூஜைக்கான சரியான நேரம் இதோ?

செல்வ வளத்தை அருளும் கோகுலாஷ்டமி

இந்த உலகத்தை காத்து ரட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார்.

அதோடு மகாபாரத போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை எனும் அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம்.

இந்த உலகத்தை காத்து ரட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். அதோடு மகாபாரத போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை எனும் அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும்.

அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம்.

​கிருஷ்ணர் பிறந்த கதை :

கம்சன் எனும் அரக்கன் தனது தங்கைக்கு பிறக்கும் 8வது குழந்தையின் கையால் கொல்லப்படுவான் என்பதை அசரீரியின் மூலம் அறிந்து தங்கை என்றும் பாராமல் தேவகி வசுதேவரைச் சிறையில் அடைத்தான்.

தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைகளை கொன்று வந்த கம்சனிடமிருந்து, எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ணரை காப்பாற்ற யமுனை நதியைக் கடந்து வசுதேவர் கிருஷ்ணரை கோகுலத்தில் வாழ்ந்து வந்த யாதவ குலத்தை சேர்ந்த நந்தகோபர் – யசோதையிடம் சேர்த்தார்.

கோகுலத்தில் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்த கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்தார். வளர்ந்து இளைஞன் ஆனதும் கம்சனை அழித்தார்.

பின்னர் மகாபாரத போர் என கிருஷ்ணரின் லீலைகள் நீண்டு கொண்டே செல்கிறது.

கிருஷ்ண ஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது, விரதம் இருப்பது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய் பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது

அந்த வகையில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி தமிழகத்திலும், வட இந்தியாவில் 12ம் தேதியும் கிருஷ்ண ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 11 அதாவது ஆடி 27ம் தேதி காலை 7.55 மணிக்கு அஷ்டமி திதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி காலை 9.36 மணி வரை உள்ளது.

கிருஷ்ணர் அவதரித்ததாக அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 11ம் தேதி தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே சமயம், கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜை புனஸ்காரம் செய்யப்படுவது வழக்கம்.

சகல வளத்தையும் அருளும் கிருஷ்ண ஜெயந்தி விரத முறைகள்…

​கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்ய சரியான நேரம் :

அஷ்டமி திதி ஆகஸ்ட் 11ம் தேதி காலை 7.55 மணிக்கு தொடங்குவதால் அதன் பின்னர் எமகண்டம், குளிகை, ராகு காலம் தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் அபிஷேகம், பூஜை புனஸ்காரம் செய்ய உகந்த நேரமே.

குறிப்பாக அந்த நாளில் வரக்கூடிய நல்ல நேரம், கெளரி நல்ல நேரம் மிகவும் உகந்ததாக பார்க்கப்படுகிறது.

நல்ல நேரம்

காலை 7:30 முதல் 8:00 மணி வரை

மாலை 4:45 மணி முதல் 5.45 மணி வரை

கெளரி நல்ல நேரம்

காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை

மாலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

இந்த நேரங்கள் பூஜை செய்ய மிகவும் உகந்தது.

வட இந்தியர்கள் பெரும்பாலும் இரவு 12 மணிக்கு மேல் கிருஷ்ண சிலைக்கு அபிஷேகம், பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

கிருஷ்ணர் ஜெயந்தி வரலாறும், கொண்டாட்டங்களும்!!

கிருஷ்ண வழிபாட்டில் இடம்பெற வேண்டியது:

கிருஷ்ணருக்கு வெண்ணெய் உட்பட இனிப்பு பலகாரங்கள் பிடிக்கும். அதனால் நம்மால் முடிந்த அளவு இனிப்புகளை செய்து வழிபடுவதோடு, பூஜையில் வெண்ணெய் இடம்பெறுவது அவசியம்.

கிருஷ்ணனுக்கு உகந்த இந்த மந்திரங்களை சொன்னால் சகலமும் நன்மை தான்!

அதே போல் குசேலனின் அன்பை அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார்.

அதனால் எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய முடியவில்லை என்ற நிலை இருப்பவர்கள் கலங்காமல் பூஜையில் அவல், வெண்ணெய் வைத்தாலே கிருஷ்ண பரமாத்மா மனதார ஏற்றுக் கொள்வார்.

கிருஷ்ண தினத்தில் செய்ய வேண்டியது என்ன?

இந்த அற்புத தினத்தில் கிருஷ்ணரையே நினைத்து உண்ணா விரதமிருந்து அவரது நாமங்களை சொல்லுவதும், கிருஷ்ணர் குறித்த பாடல்கள் பஜனையாகப் பாடி வழிபடுவது வழக்கம்.

கிருஷ்ணர் அருளிய கீதை உபதேசத்தை பாராயணம் செய்யலாம்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...