7 முறை தேசியவிருது பெற்ற நடிகர் தனுஷின் பிறந்தநாள்
7 முறை தேசியவிருது பெற்ற நடிகர் தனுஷின் பிறந்தநாள்
துள்ளுவதோ இளமை மூலம் ஒரு சின்னபையன், தன் சகோதரனின் இயக்கத்தில் தன் முதல் திரையுலக பிரவேசத்தை தொடங்கினார் தனுஷ் என்னும் சரவணன். பள்ளிப்பருவத்தில் மாணவ மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அந்த பிரச்சனைகளுக்கு அவர்கள் சார்பில் இருந்து கிடைக்கப்பட்ட தீர்வுகள், அதன் சாதக பாதகங்கள், வளர்ந்து ஒரு கட்டத்தையெட்டிய பிறகு வாழ்க்கையை அதன் போக்கில் வாழ பழகிக்கொள்ளும் ஒரு மாணவனாக தனுஷ் அறிமுகமாகியிருப்பார்.
அதன் பிறகு காதல்கொண்டேன் சோடாபுட்டி கண்ணாடிக்குள் வலிகள் சுமந்திருந்த கண்களைக் கொண்ட இளைஞன். ஒரு அநாதையாக சிறு பெண்ணின் நட்புக் கூட்டிற்குள் இருந்து வலிக்கவலிக்க அந்த பறவையை பிரித்த பிறகு மனதிற்குள்ளேயே புழுங்கி தவித்து கதாநாயகியை சிறுவயதுத் தோழியாய் சந்தித்து பழகும் தருணம்.
அவளுடன் காமம் கலக்காத காதலையும், அன்பையும் யாசிக்கும் தருணம், அது கலைந்த நிமிடங்கள் என படம் முழுக்க அற்புதமான வடிவமைப்புகளைக் கொண்டிருந்தது, உணர்வுகளுக்காக தன்னையே அழித்துக் கொள்ளும் கடைசி நிமிட போராட்டங்களில் அபரிதமான நடிப்பை விளக்கி புருவம் தூக்கவைத்திருப்பார். கலவையான பல சர்ச்சை விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், படம் வெற்றிபெற்று சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக்கொடுத்தது.
அடுத்தது திருடா திருடி காதல்கொண்டேன் படத்தின் கனமான பாத்திரத்தை அசால்டாக மாற்றி ஜாலியாக பையன். நண்பர்களுடன் லூட்டி, கதாநாயகியுடன் கிண்டல், கேலி, என காமெடியில் அதகளம் பண்ணியிருந்த படம். தேவதையைக் கொண்டேன் இன்னொரு பரிமாணம் இதையெல்லாம் தாண்டி சில அமெச்சூர் படங்கள் வந்திருந்தாலும், 2011ம் வருடம் ஆடுகளம் படம் தனுஷ்க்கு தேசிய விருதைப் பெற்று தந்தது.
பொல்லாதவன், புதுப்பேட்டை, பரட்டை என்கிற அழகு சுந்தரம், யாரடி நீ மோகினி,படிக்காதவன், குட்டி என்ற திரைப்படங்களில் இயல்பான நடிப்பில் பல படங்களில் தன் பரிமாணத்தை பதித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
அம்பிகாபதி, கமத் & கமத் திரைப்படம் பாலிவுட்டில் கால் பதிக்க வைத்தது.
நடிகர், திரைப்படத்தயாரிப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், பாடகர் என பல்வேறு அவதாரங்களையும் தாண்டிய தனுஷின் தயாரிப்பில் வெளிவந்த விசாரணை படத்திற்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.
இன்னும் அநேக திரைப்படங்கள் மரியானில் ஆரம்பித்து, தொடரி, வேலையில்லாத பட்டதாரி, மாரி வெரைட்டியான படங்கள்.
தற்போது வெளிவந்த அசுரன் அசுரத்தனமான வெற்றியோடு படிப்பு மட்டுமே நம்முடன் கடைசி வரையில் துணைவரும் என்ற மெசேஜ்ஜையும் தந்த திரைப்படம்.
இன்னும் உச்சம் தொட வாழ்க தனுஷ்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்