இன்றைய தினப்பலன்கள் (13.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (13.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்

தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : இலாபம் கிடைக்கும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரிஷபம்

குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். கௌரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : மதிப்புகள் உயரும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் பணிகளால் பொருள் வரவு அதிகரிக்கும். மனைவியால் சுபவிரயங்கள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : மந்தத்தன்மை உண்டாகும்.
புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.

கடகம்

ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளால் காலதாமதமான பலன்கள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உயர் பதவியில் இருக்கும் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : அங்கீகாரம் உண்டாகும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : அறிமுகம் ஏற்படும்.

சிம்மம்

பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கடனால் மனவருத்தங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். தாய்மாமன் உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : அமைதியுடன் செயல்படவும்.

கன்னி

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். சொந்த-பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். வர்த்தகப் பணிகளில் மேன்மையான சூழல் அமையும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
உத்திரம் : தனவரவுகள் உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : கீர்த்தி உண்டாகும்.

துலாம்

துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். எண்ணங்களுக்கு செயல் வடிவம் அளிக்க முயல்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான சிந்தனைகளால் நன்மை ஏற்படும். பணியில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை அறிவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : நன்மையான நாள்.
விசாகம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

விருச்சிகம்

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பொதுக் காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். பிள்ளைகளால் சுபச்செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை உண்டாகும். இலக்கியம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் ஆர்வம் ஏற்படும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : காரியசித்தி உண்டாகும்.
அனுஷம் : சுபச்செலவுகள் ஏற்படும்.
கேட்டை : ஆர்வம் பிறக்கும்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் உண்டாகும். பேச்சுக்களால் தனலாபம் கிடைக்கும். பணியில் முயற்சிக்கேற்ற மேன்மை உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் உறவினர்களின் மூலம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : சிந்தனைகள் உண்டாகும்.
உத்திராடம் : மேன்மை ஏற்படும்.

மகரம்

செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் அகலும். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். புதிய நவீன பொருட்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
உத்திராடம் : எதிர்ப்புகள் அகலும்.
திருவோணம் : முயற்சிகள் கைகூடும்.
அவிட்டம் : பயணங்கள் சாதகமாகும்.

கும்பம்

சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் அகன்று தெளிவு பிறக்கும். நினைத்த காரியங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சதயம் : தெளிவு பிறக்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் ஏற்படும். கடல் மார்க்க பயணங்கள் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். பொருள் வரவால் சேமிப்பு உயரும். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
பூரட்டாதி : சிந்தனைகள் மேலோங்கும்.
உத்திரட்டாதி : சேமிப்பு உயரும்.
ரேவதி : மாற்றம் ஏற்படும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...