அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று ஃபேட் மேன் (Fat Man) என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின்மீது வீசியது. இக்குண்டு சுமார் 3.5மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது. இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர். அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம் ஐ.நா.பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் […]Read More
மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவைகள் சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும், அதிக விளையாட்டுத்திறனும் கொண்டவை. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. இதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலக பூனை தினம் கொண்டாடப்படுகிறது. உலிமிரி இராமலிங்கசுவாமி இந்திய மருத்துவ அறிஞர் உலிமிரி இராமலிங்கசுவாமி 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார். […]Read More
தேசிய கைத்தறி தினம் கைத்தறி நெசவாளர்களை நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். இவருடைய பெற்றோருக்கு இவர் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஆனால், வங்கத்தில் 1942ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தால் இவர் வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். 1960ஆண்டுகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது ‘இந்தியர்களால் உணவு உற்பத்தி […]Read More
பென்சிலின் மருந்தைக் கண்டறிந்த அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் 1881ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். 20 வயதில் நோய்த்தடுப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த பேராசிரியர் ஆம்ரைட் டே போல தானும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என நினைத்து அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். நோயுண்டாக்கும் கிருமிகளை செயற்கை முறையில் வளர்த்து, அவற்றில் திடீரென்று தோன்றிய நீல நிற பூஞ்சையிலிருந்து பாக்டீரியா தாக்குதலுக்கு எதிரான ஆன்டிபயாட்டிக் மருந்தான பென்சிலினை கண்டறிந்தார். 1945ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. […]Read More
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஹவாயில் பிறந்தார். இவர் 2008ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6, 2012ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார். அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அமெரிக்க […]Read More
உலகையே புரட்டிப்போட்ட ஹாரிபாட்டர் கதையின் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் 1965ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 1990ஆம் ஆண்டில் ஒருமுறை இவர் மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல இருந்தபோது அவரது ரயில் தாமதமாக வந்தது. அப்போது மக்கள் மிகுந்த தொடருந்தில் லண்டனை நோக்கி இவர் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் ஹாரிபாட்டர் கதைக்கான எண்ணம் இவருடைய மனதில் உதித்தது. அப்போது சுழன்ற இவரது கற்பனையில் பிறந்தவன்தான் மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் ஹாரிபாட்டர். 1995ஆம் ஆண்டு ‘ஹாரிபாட்டர் அன்ட் தி […]Read More
மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார். அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார். இந்திய மாதர் சங்கத்தைத் தொடங்கி வைத்தவர் இவர்தான். மேலும் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆவர். மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான். தற்போது உள்ள சென்னை அடையாறு […]Read More
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி தமிழ் […]Read More
ஒவ்வொரு ஆண்டும் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் ஜூலை 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலக கல்லீரல் அழற்சி தினம் கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் (Hepatitis) எனப்படும் […]Read More
தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார். இவர் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1940ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை ‘கவிமணி’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார். மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. […]Read More
- QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!
- தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!