தமிழ்நாடு (ம) புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 81% வாக்குகள் பதிவு

சென்னை: தமிழ்​நாடு – புதுச்​சேரி பார் கவுன்​சில் தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. மாலை 5 மணி நில​வரப்​படி 81 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. ஏப்​.3-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது.

தமிழ்​நாடு – புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்கு 23 உறுப்​பினர்​களைத் தேர்ந்​தெடுப்​ப​தற்​கான தேர்​தல் உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி நேற்று நடை​பெற்​றது. இத்​தேர்​தலில் 30-க்​கும் மேற்​பட்ட பெண்​கள் உட்பட மொத்​தம் 143 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்​டனர். தமிழகத்​தில் 166, புதுச்​சேரி​யில் 2 என மொத்​தம் 168 வாக்​குச்​சாவடிகளில் காலை 10 மணிக்​குத் தொடங்​கிய வாக்​குப்​ப​திவு மாலை 5 மணி​யுடன் நிறைவடைந்​தது.

முதல்​முறை​யாக, இந்த தேர்​தலில் மொத்த வாக்​காளர்​களான ஒரு லட்​சத்து 540 வழக்​கறிஞர்​களின் அனைத்து விவரங்​களும் க்யூஆர் கோடு வடி​வில் ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டன. அந்த படிவம் மற்​றும் வழக்​கறிஞர் அடை​யாள அட்​டை​யுடன் வந்​தவர்​கள் மட்​டுமே வாக்​களிக்க அனு​ம​திக்​கப்​பட்​டனர். க்யூ-ஆர் கோடு குறி​யீட்டை ஸ்கேன் செய்​து, வழக்​கறிஞர்​களின் விவரங்​களை சரி​பார்த்​து, அவர்​களை புகைப்​படம் எடுத்த பிறகே வாக்​களிக்க அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மட்​டும் 20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​கள் நீண்ட வரிசை​யில் நின்று வாக்​களித்​தனர். இதற்​காக, நீதி​மன்​றத்​தின் எஸ்​பிளனேடு நுழைவு​வா​யில் அருகே கலை​யரங்​கம் பகு​தி​யில் 56 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டு, போலீஸ் பாது​காப்​புடன் வழக்​கறிஞர்​கள் வாக்​குச்​சாவடிகளுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

பெண் வழக்​கறிஞர்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். மூத்த வழக்​கறிஞர்​களும் தங்​களது நீதி​மன்​றப் பணி​களுக்கு இடையே வாக்​களித்​து​விட்​டுச் சென்​றனர். திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, விசிக தலை​வர் திரு​மாவளவன், பாஜக எம்​எல்ஏ வானதி சீனி​வாசன் உள்​ளிட்​டோரும் தங்​களது வாக்​கு​களை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பதிவு செய்​தனர்.

உச்ச நீதி​மன்​றத்​தில் உள்ள 64 தமிழக வழக்​கறிஞர்​கள் வாக்​களிக்​கும் வகை​யில் உச்ச நீதி​மன்​றத்​தி​லும் வாக்கு மையம் அமைக்​கப்​பட்​டது. தேர்​தல் அதி​காரி​யான முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா மற்​றும் உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி அமைக்​கப்​பட்ட தேர்​தல் உயர்​நிலைக் குழுத் தலை​வரும், இமாச்சல பிரதேச முன்​னாள் தலைமை நீதிப​தி​யு​மான ராஜிவ் ஷக்​தேர், உயர்​நிலைக் குழு உறுப்​பினர்​களான மூத்த வழக்​கறிஞர்​கள் இ.ஓம் பிர​காஷ், அமித் ஜார்ஜ் ஆகியோர் தேர்​தல் பணி​களை மேற்​பார்​வை​யிட்​டனர். முதல்​முறை​யாக, அனைத்து மாவட்​டங்​களுக்​கும் முன்​னாள் நீதிப​தி​கள், மூத்த வழக்​கறிஞர்​கள் தேர்​தல் பார்​வை​யாளர்​களாக அனுப்பி வைக்​கப்​பட்டு அமை​தி​யான முறை​யில் தேர்​தல் நடத்​தப்​பட்​டது. இத்​தேர்​தலில் பதி​வான வாக்​கு​கள் சென்​னைக்கு கொண்டு வரப்​பட்​டு, ஏப்​.3-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை தொடங்க உள்​ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!