இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி நடை பெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ந்தேதி கடைசி நாளாகும்.

வேட்புமனு தாக்கல் செய்ய மொத்தம் அவகாசம் குறைவாக இருப்பதால் முதல் நாளான நேற்று முதலே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர்.

அந்த வகையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவாரூரில் இருந்து இன்று (மார்ச் 31) பரப்புரையை தொடங்குகிறார். இதன்படி இன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

முன்னதாக இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்ததாவது:-

தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இந்த தொடர் பிரசாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்குகிறார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தலைவர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஊரான திருவாரூரில் பரப்புரையை தொடங்குகிறார்.

குறிப்பு: கழகத் தலைவர் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரசாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கழகத் தோழர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாமென கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!