மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 27-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 333 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்தானது நேற்று முன் தினம் வினாடிக்கு 521 கனஅடியாக அதிகரித்தது.

இந்த அளவு நேற்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 717 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 82.49 அடியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!