இன்று சேலத்தில் தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்..!

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக்கழக பயணத்தின் அடுத்தகட்டமாக, மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய் உத்தரவின்பேரில், நம் கட்சியின் குறிக்கோள்களையும், கொள்கைகளையும் தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

தவெக குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் 5 மண்டலங்கள், தவெக நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்கள் மற்றும், 12,500 கிளைகளில் தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!