‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 27-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.”
குரோதி வருடம் மாசி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 27.02.2025 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.01 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.இன்று மாலை 04.07 வரை அவிட்டம். பின்னர் சதயம்.புனர்பூசம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷ ராசி அன்பர்களே!
ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். ஆன்மீக யாத்திரை உங்களுக்கு மிகுந்த திருப்தி அளிக்கும். நீங்கள் பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். பணியில் உங்கள் முயற்சிக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் பணம் சேமிக்கும் நிலையில் இருப்பீர்கள். இன்று ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினயும் இருக்காது. நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே!
இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படும். பிரார்த்தனையில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். உங்கள் மனம் தெளிவாக இருக்கும். அதன் மூலம் வெற்றி கிடைக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் வெற்றி காணலாம். என்றாலும் பலன்கள் முழு அளவில் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று நிதிநிலைமை மகிழ்ச்சி கரமாக இருக்காது. தேவையற்ற பொறுப்புகள் காரணமாக இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். இன்று கால் வலி மற்றும் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களை வருத்திக் கொள்வதை தவிர்க்கவும்.
மிதுன ராசி அன்பர்களே!
மனதில் காணப்படும் வருத்தம் காரணமாக குழப்பங்கள் இருக்கும். பிரார்த்தனை உங்களுக்கு நன்மை அளிக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்றினால் நல்ல பலன் காணலாம். குடும்ப பிரச்சனை ஒன்றில் உங்கள் துணையுடன் சண்டை ஏற்படும். இது உறவின் ஸ்திரத்தன்மை யை பாதிக்கும். கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். உங்கள் தினசரி தேவைகளை உங்களால் பூர்த்தி செய்து கொள்ள இயலாது. பல் தொற்று ஏற்படுத்தும் உணவு வகைகளை தவிர்க்கவும். தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடக ராசி அன்பர்களே!
இன்று உங்களிடம் நேர்மறை எண்ணம் காணப்படும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் மனதை சமநிலைப் படுத்த வேண்டும். உறுதியுடன் செயல்பட்டால் எளிமையாக பணியாற்றலாம். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். இண்ட்டு நிதிநிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சேமிப்பதற்கான வாய்ப்பும் அதிகம். முதலீடுகளில் பங்கு கொள்வதன் மூலம் இன்று பண வரவு காணலாம். இன்று ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினயும் இருக்காது. தெளிவான மனதும் உறுதியும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.]
சிம்ம ராசி அன்பர்களே!
உங்கள் செயல்களை சுமூகமாக நடத்துவதில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். உங்கள் ஆர்வத்தை மேம்ப்டுத்தும் முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். உங்கள் பணிகளை நீங்கள் எளிதாக மேற்கொள்வீர்கள். உங்கள் பணிக்கு பாராட்டு கிடைக்கும். கடினமான பணிகளைக் கூட நீங்கள் எளிதாக ஆற்றுவீர்கள். இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.உங்களின் கடின உழைப்பு காரணமாக ஊக்கத் தொகை வகையில் இன்று கூடுதல் பண வரவு காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் நம்பிக்கை உணர்வு உங்கள் ஆரோக்கியத்தில் எதிரொலிக்கும். உங்கள் அணுகுமுறையில் அனுசரணை காணப்படும்.
கன்னி ராசி அன்பர்களே!
பதட்டம் காரணமாக எதிர்மறை எண்ணங்கள் காணப்படும். இசையைக் கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். அதிக பணிகள் காரணமாக நேரம் அதிகம் செலவாகும். உங்கள் பணிகளை முடிக்க இயலாமல் இருக்கும். இன்று திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று அதிக செலவுகள் காணப்படும். அஜாக்கிரதை காரணமாக இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தலை வலி போன்ற சிறிய ஆரோக்கியப் பிரச்சினைகள் எழலாம். தெய்வீக இசை கேட்பது மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.
துலா ராசி அன்பர்களே!
இன்று பலன்கள் கலந்து காணப்படும். அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும். இன்றைய செயல்களைக் கையாள நீங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டியது அவசியம். உங்கள இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அது உங்கள் சுய முயற்சியை சார்ந்துள்ளது. இன்று அதிகப் பணிகள் காணப்படும். நற்பலன்களை அடைய உங்கள் பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டியது முக்கியம். பணப்புழக்கம் இன்று குறைந்து காணப்படும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இயலாது. இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது.
விருச்சிக ராசி அன்பர்களே!
இன்று உங்களுக்கு மிகவும் வெற்றிகரமான நாள். நீங்கள் மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் உங்கள் செயல்களை மேற்கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் இன்று நன்மை அளிக்கும். உங்கள் பணிக்கு சிறந்த பாராட்டு பெறுவீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் பாராட்டு உற்சாகம் அளிக்கும். . இன்று அதிக பணம் காணப்படும். வங்கியில் பணத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள். இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். இன்று அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்,
தனுசு ராசி அன்பர்களே!
இன்று கட்டுப்பாட்டை மீறும் சூழல் காணப்படும். என்றாலும் நீங்கள் அதிலிருந்து நன்மை பெற முயற்சிப்பீர்கள். உறுதியும் திட்டமிடலும் உங்களுக்கு வழி காட்டும். உங்கள் பணிகளை எளிதாக முடிக்க இயலாது. உங்கள் பாதி வேலைகள் முடிக்க முடியாது நிலுவையில் இருக்கும். இலக்குகளை அடைய நீங்கள் சிறிது கடினமாக உழைக்க வேண்டும். அஜாக்கிரதை காரணமாக நீங்கள் பணம் இழக்க நேரலாம். தவறான முடிவுகள் மற்றும் முதலீடுகளால் நஷ்டம் ஏற்படும். இன்று கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் உழைப்பின் காரணமாக பிரச்சினை ஏற்படும். பதட்டத்தை தவிர்க்கவும். பிரார்த்தனை மேற்கொள்ளவும்.
மகர ராசி அன்பர்களே!
இது உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. தேவையற்ற மனக் குழப்பங்கள் உங்களை முன்னேற விடாமல் தடுக்கும். இன்று உங்கள் செயல்களில் மந்த நிலை காணப்படும். இன்று நீங்கள் திறமையாக பணியாற்ற இயலாது. இன்று உங்கள் பொறுப்புகளை முடிக்க வேண்டிய நிலைமை காணப்படும். இன்று நிதிநிலைமை சுமாராக இருக்கும். இன்று வரவு செலவு இரண்டும் காணப்படும். பணத்தை பராமரிக்கும் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். கால் மற்றும் தொடை வலி இன்று காணப்படும். ஆற்றல் மற்றும் ஆரோக்கியக் குறைவு காரணமாக சோர்வு காணப்படும்.
கும்பராசி அன்பர்களே!
இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். இசை கேட்டல் திரைப்படங்கள் பார்த்தல் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். நீங்கள் பிறரால் தவிர்க்கப் படுவது போல உணர்வீர்கள். மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது. இது உங்களுக்கு சற்று ஏமாற்றம் அளிக்கும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் மகிழ்ச்சி காணப்படாது. திடீர் பண நஷ்டத்திற்கான வாய்ப்பு உள்ளது. அதனை சமாளிக்க இயலாத காரணத்தினால் நீங்கள் சற்று எமற்றமடைவீர்கள். பணத்தை கவனமாகக் கையாளவும். முதுகு விறைப்பு மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.நீங்கள் எளிதில் சோர்வடைவீர்கள். ஓய்வெடுக்க வேண்டியது அவசியம்.
மீனராசி அன்பர்களே!
இந்த நாள் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். நீங்கள் உறுதியுடன் செயல்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியில் வளர்ச்சி காணப்படும். பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வீர்கள். நீங்கள் திறமையான செயல்முறையைப் பராமரிப்பீர்கள். உங்களிடம்இருக்கும் பணம் உங்களுக்கு திருப்தி அளிக்கும். சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு உதவியாக இருக்கும். இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும்.