இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 28 சனிக்கிழமை 2024 )
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 28-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
குரோதி வருடம் மார்கழி மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை 28.12.2024 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 02.41 வரை துவாதசி. பின்னர் திரியோதசி இன்று இரவு 10.54 வரை அனுஷம். பின்னர் கேட்டை.அஸ்வினி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷராசிஅன்பர்களே!
மேஷராசி அன்பர்களே! சின்னச் சின்னக் குழப்பம் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். உறவினர் கள் வருகையால் வீட்டில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படக்கூடும். தாய் மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் கவனம் தேவை.
ரிஷப ராசி அன்பர்களே!
ரிஷபராசி அன்பர்களே! உற்சாகமான நாள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், திடீர் செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையக் கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியால் எளிதாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.
மிதுனராசிஅன்பர்களே!
மிதுனராசி அன்பர்களே! தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற் படும். உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட் டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட வீண்பழிகள் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கடகராசிஅன்பர்களே!
கடகராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தெய்வ பக்தி அதிகரிக்கும். கோயில் களுக்குச் சென்று குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி யுடன் செலவுகளையும் தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.
சிம்மராசிஅன்பர்களே!
சிம்மராசி அன்பர்களே! வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதரர் குடும்பம் தொடர்பான முக்கிய விஷயத்தில் உங்கள் ஆலோசனையைக் கேட்பார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் இன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்த சலுகை தள்ளிப் போகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.
கன்னிராசிஅன்பர்களே!
கன்னிராசி அன்பர்களே! மனதில் தைரியம் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே சிறு மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். இளைய சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
துலா ராசி அன்பர்களே!
துலாராசி அன்பர்களே! அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவினர் களால் எதிர்பாராத செல வுகள் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும். பிள்ளை கள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்றசெலவு ஏற்படும்.
விருச்சிகராசிஅன்பர்களே!
விருச்சிகராசி அன்பர்களே! உற்சாகமான நாளாக அமையும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கத்தான் செய்யும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.
தனுசுராசிஅன்பர்களே!
தனுசுராசி அன்பர்களே! தேவையான பணம் கையில் இருந்தாலும், திடீர் செலவுகளால் மனதில் சற்று சோர்வு உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக் கூடும். உறவினர் களால் உதவியும் உண்டு; உபத்திரவமும் உண்டு. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் பணிகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
மகரராசிஅன்பர்களே!
மகரராசி அன்பர்களே! வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
கும்பராசிஅன்பர்களே!
கும்பராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பரபரப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். அலுவலகத்தில் நீங்கள் வைக்கும் கோரிக்கை உடனே நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
மீனராசிஅன்பர்களே!
மீனராசி அன்பர்களே! இன்று மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடவும். ஆனால், எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். உறவினர்களால் நன்மை உண் டாகும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் பிரசித்திப் பெற்ற கோயில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களை விமர்சித்துப் பேசினாலும் பொறுமை காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.