அக்டோபர் மாத ராசிபலன் 2023

 அக்டோபர் மாத ராசிபலன் 2023

2023 அக்டோபர் மாதத்தில் 6 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. இதன் தாக்கம் 12 ராசிகளுக்கு பல நல்ல தாக்கங்களை தருவதாக இருக்கும். அக்டோபர் மாதத்தில் மேஷம் முதல் கடக ராசி வரையிலான நண்பர்களுக்கு பலன் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

                    மேஷம்

மேஷ ராசியினருக்கு அக்டோபர் மாதத்தில் அவர்களின் பேச்சிலும், இயல்பிலும் அதிக கட்டுப்பாடு தேவை. பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக அமையும். சில காரணங்களால் உங்களின் உடல்நிலை மோசமாக வாய்ப்புள்ளது. இருப்பினும் உடல்நிலை வேகமாக முன்னேற்றம் அடையும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி எதிர்பார்த்து வெற்றிகளை பெறுவீர்கள். தொழில் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் பயணம் நல்ல வெற்றியைத் தரும். பணியிடத்தில் மோதலில் ஈடுபடாமல், சக ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவது நல்லது.

வாரத்தின் பிற்பகுதியில் உங்கள் உணர்ச்சிகளையும், கோவத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இந்த மாதத்தில் உங்களின் இக்கட்டான தருணங்களில் நண்பர்கள் உதவ தயாராக இருப்பார்கள். மாதத்தின் நடுவில் உங்களின் பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆபத்தான முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும். காதல் உறவுகளில் பல நல்ல முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.
குடும்ப உறவுகளில் சில தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நிதானமும் அமைதியான பேச்சு வார்த்தையும் நன்மை தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். பருவகால நோய்களில் கவனமாக இருக்கவும்.​

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தின் ஆரம்பம் மங்களகரமானதாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கும்.மாதத் தொடக்கத்தில் நீங்கள் என் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும் அதன் மூலம் முன்னேற்றத்தை பெற்றிடலாம். உங்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்த தடைகள் நீங்கி நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் நிர்ணயத்தை இலக்கை அடைய மூத்த அதிகாரிகள் மற்றும் சக நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் சந்தைப்படுத்துதல், புதிய ஒப்பந்தம் போன்றவற்றிற்கு சாதகமான மாதமாக இருக்கும்.

மாதத்தின் இரண்டாவது வாரத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சில அலைச்சல்கள் ஏற்படும். கடின உழைப்பின் மூலமே உங்களின் இலக்கை அடைய முடியும். இந்த மாதத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
குடும்பத்தில் மூத்தவர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து நல்ல ஆதரவை பெறுவீர்கள். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் சாதக பலன்கள் கிடைக்கும்.
வெளியூர், வெளிநாடு வேலைக்கு முயற்சிகளுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் துணையுடன் உறவு வலுவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மிதுனம்

அக்டோபர் மாத தொடக்கத்தில், மிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் தடைகள் அல்லது சச்சரவுகள் நீங்கி நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.செல்வாக்கு மிக்கவர் மூலம் சொத்து தகராறுகளிலிருந்து பிரச்சனைகள் நீங்க பெரும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் ஏற்படும். மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வாழ்க்கையில் நல்ல வெற்றியும் லாபத்தையும் பெற்றிட முடியும். இருப்பினும் எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதத்தில் திடீரென்று நீங்கள் பெரிய செலவுகள் செய்ய வேண்டியது இருக்கும். அதனால் உங்களின் செலவுகளை திட்டமிட்டு செய்யவும். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பு மற்றும் முயற்சிகள் தேவைப்படும்.மாதத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு உடல் நலம் மற்றும் உறவுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

காதல் உறவுகளில் அடிப்படையான நம்பிக்கை வலுப்பெறும். காதல் உறவில் பதற்றத்தை அதிகரிப்பதைத் தவிர்க்கவும். உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். இல்லையெனில் பின்னர் வருத்தப்பட வேண்டியது இருக்கும். திருமண வாழ்க்கையில் துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள்.
உடன் பிறந்தவர்களிடமிருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தையும், உணவு பழக்க வழக்கங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கடகம்

கடக ராசியினருக்கு அக்டோபர் மாதத்தில் முதல் பாதி மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மாத தொடக்கத்தில் உங்களின் கருத்துக்கள், பெற்றவர்களால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். உங்கள் தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்து வெற்றியை பெறுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனத்தால் எல்லா தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். இதுவரை முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். குடும்பத்திலும், உறவினர்களிடமும் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு அனுகூல பலன்களை பெற்றுத் தரும். சொத்து தொடர்பான தகராறு நீதிமன்ற அலைச்சலை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும். சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

மாதத்தின் பிற்பகுதியில் சற்று சிக்கலானதாக இருக்கும். யாரையும் நம்பி உங்கள் வேலையை ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்திலும், பணியிடத்திலும் தேவையற்ற சண்டை, மனஸ்தாபம் ஏற்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பாக இருக்கும்.
​இந்த மாதத்தில் குடும்ப உறுப்பினர்கள் இடம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். காதல் உறவுகளில் சில ஏற்றத்தாழ்வுகள் வரலாம். குடும்பத்தின் ஒத்துழைப்பும் சிலருக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் மனைவியின் உடல்நிலை குறித்து சற்று கவலை ஏற்படும்.​

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் மங்களகரமானதாகவும், விரும்பிய நற்பலன்களை பெறக்கூடிய மாதமாகவும் இருக்கும். இந்த மாத தொடக்கத்தில் உங்களின் முயற்சிகள் மற்றும் கடின உழைப்புக்கு முழு பலன்கள் கிடைக்கும். பல சாதனைகளை பெற வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் மங்களகரமானதாகவும், லாபமானதாகவும் இருக்கும்.

நீங்கள் சந்திக்க கூடிய மதிப்பு மிக்க நபரின் உதவியாளர் எதிர்காலத்தில் பெரிய லாபத்தை பெறலாம். அரசு மற்றும் அதிகாரம் தொடர்பான நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். அரசியலில் உள்ளவர்களுக்கு சிலருக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். இந்த மாதத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். மாதத்தின் பிற்பகுதியில் சிலருக்கு விபத்து அல்லது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வண்டி வாகனம் பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவை. இந்த மாதத்தில் எதிர்பாள்ளினத்தின் மீதான இருப்ப அதிகரிக்கும். ஒருவரின் மீதான நட்பு காதலாக மாற வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாகமான தருணங்களைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த அக்டோபர் மாதம் பலவிதத்தில் நன்மைகள் கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும். வேலைகளை முடிக்க கூடுதல் உழைப்பும் முயற்சியும் தேவைப்படும். மாதத்தில் உங்களின் உடல்நலம் மற்றும் உறவுகளின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உங்களின் உணவு பழக்கத்தில் கவனம் தேவை. வியாபார தொடர்பு உடையவர்களுக்கு விரும்பிய நன்மைகளை பெறுவார்கள்.
தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான அவர்களுக்கு விரும்பிய நன்மைகளை பெறலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். சிலருக்கு நிலம், வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
மாதத்தின் பிற்பகுதியில் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் செயல்பாடுகள் மேம்படும். நல்ல பெயர் கிடைக்க வாய்ப்புள்ளது. குழுவாக செய்யக்கூடிய வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் உங்களின் பேச்சு மற்றும் நடத்தையில் கூடுதல் கட்டுப்பாடு தேவை. காதல் உறவுக்கு சாதகமான காலமாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான தருணத்தை செலவிடுவீர்கள்.

துலாம்

துலாம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்தை விட, அக்டோபர் மாதம் மிகவும் மங்களகரமானதாகவும், வெற்றிகரமானதாகவும் இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். உங்கள் இந்த தைரியம் மற்றும் கடின உழைப்பால் பெரிய இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் மூத்தவர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். அதே சமயத்தில் வேலை தொடர்பாக மாதத்தின் பிற்பகுதியில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். பொறுமையுடன் கையாளவும். வீடு, வண்டி வாகனம் வாங்கும் முயற்சியில் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில், வேளையில் மெதுவான முன்னேற்றம் இருந்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். இந்த மாதத்தில் வணிகர்கள் அபாயகரமான திட்டங்களில் முதலீடு செய்வது தவிர்க்கவும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு பண பரிவர்த்தனைகளில் சற்று கவனமாக இருக்கவும். குடும்ப உறவுகளில் மாதத்தின் பிற்பகுதியில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். குடும்ப பொறுப்புகள் தொடர்பாக பிசியாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம். உடல் மற்றும் மனசோர்வு நீடிக்கும்.
திருமணம் முயற்சிகளில் நல்லா வரன் அமைய வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தின் ஆரம்பம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.நீங்கள் திட்டமிடக்கூடிய இந்த ஒரு வேலையையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். எதிலும் சிறப்பான நம்பிக்கை உடன் செயல்படுவார்கள். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். வணிகம் செய்பவர்களுக்கு விரும்பிய லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்த இந்த காலத்தில் நீங்கள் இருக்கக்கூடிய கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும்.

இந்த மாதத்தில் உங்களின் பேச்சில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை. உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் சற்று குறை இருக்கும்.
பணியிடத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் உறவில் சில கசப்பான சண்டைகள் இருப்பினும் நெருக்கம் அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள். இந்த மாதத்தில் நீங்கள் எந்த ஒரு வேலையிலும் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மாதத்தின் ஆரம்பம் உங்களுக்கு மங்களத்தையும், வெற்றியையும் தரப்போகிறது. இந்த நேரத்தில், வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபரின் உதவியுடன் பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் குடிக்க முடியும்.
வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நீண்ட தூரம் தூர பயணம் செய்ய வேண்டியிருக்கும். பயணம் சற்று சோர்வாக இருந்தாலும் நல்ல லாபகரமானதாக இருக்கும். உங்கள் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மோசமான உடல்நலம் காரணமாக திட்டமிட்ட வேலைகளை முடிப்பதில் சுமக்கும் ஏற்படும். மாதத்தின் நடுப்பகுதியில், மற்றவர்களின் உதவியுடன் உங்கள் இலக்கை முன்கூட்டியே அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் பதவி அல்லது புதிய பொறுப்புகளை பெறலாம். குடும்ப உறவு மேம்படும். உங்களின் பேச்சில் கவனம் தேவை. சிலரின் பேச்சால் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் உறவில் துணையுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலரின் தவறான யோசனைகள் உறவை கெடுத்துவிடும். இந்த மாதத்தில் உங்கள் துணை என் உடல்நிலை குறித்து கவலைப்படுவீர்கள்.

மகரம்

அக்டோபர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். மாதத்தின் ஆரம்பம் சற்று கடினமாக இருந்தாலும் இறுதியில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாதத் தொடக்கத்தில் தொழில், வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் சோர்வும், எதிர்பார்த்ததை விட பலன் மறைவாகவும் கிடைக்கும். இந்த நேரத்தில், அன்பான குடும்ப உறுப்பினரின் உடல்நிலை குறித்தும் நீங்கள் கொஞ்சம் கவலைப்படுவீர்கள். வீடு தொடர்பான திடீர் பெரிய செலவுகள் செய்ய நேரிடும். போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய நபர்களுக்கு கடின உழைப்பின் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் சில பிரச்சனைகளால் தகராறுகள் ஏற்படலாம். இது உங்கள் மனதை பதற்றம் அடைய செய்யும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது குழப்பமான சூழ்நிலை இருக்கும். வெளிநாடு, வெளியூர் தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும் காதல் உறவில் மிகவும் சாதகமானதாக இருக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் ஆன தம்பதிகள் மகிழ்ச்சிகரமான சூழலை அனுபவிப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மாதத்தின் தொடக்கத்தில், உங்கள் உறவினர்களின் கடுமையான வார்த்தைகள் அல்லது நடத்தையால் உங்கள் மனம் மிகவும் புண்படலாம். இந்த நேரத்தில், உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். விரும்பிய வெற்றியைப் பெற கூடுதல் கடின உழைப்பும் முயற்சியும் செய்ய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கூடுதல் பணிச்சுமையை சந்திக்க நேரிடும். தேவையற்ற இடத்திற்கு மாற்றுதல் அல்லது மூதாதையர் சொத்துக்களை வாங்குவதில் இடையூறு போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

இந்த மாதத்தில் பண பரிவர்த்தனை அல்லது முதலீடுகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். பந்தயம், லாட்டரி போன்ற சூதாட்ட விஷயங்களில் இருந்து விலகி இருக்கவும். பணியிடத்தில் உங்களின் புத்திசாலித்தனத்தையும், விவேகத்தையும் பயன்படுத்துவீர்கள். குழந்தைகள் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு கவலை தருவதற்கு கூடியதாக இருக்கும். எதிர் பாலினத்தவர் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளவும். இந்த மாதத்தில் உடல்நிலை பிரச்சினைகள் காரணமாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம், நீங்கள் திட்டமிட்ட வேலைகள் சரியான நேரத்தில் முடிவடையும் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மொத்த வியாபாரிகளை விட சில்லறை வியாபாரிகளுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். வெளியூர் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவார்கள். அக்டோபர் நடுப்பகுதியில், சொத்து சம்பந்தமான தகராறுகள் மூத்தவர்களின் உதவியுடன் தீர்க்கப்படும். நிலம், வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மாதத்தின் நடுப்பகுதியில், வீட்டை பழுதுபார்ப்பதற்கும் அல்லது அலங்காரம் செய்வதற்கும் உங்கள் பணத்தை அதிகமாக செலவிடலாம். குடும்பத்தில் சில சுப அல்லது ஆன்மீக நிகழ்வுகள் நடத்த திட்டம் உடையவர்கள். இந்த மாதத்தில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் சாதகமாகவும், கூடுதல் வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கும். உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி பெறுவீர்கள். வேலையில் அடிக்கடி தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நிதானமாகவும், கவனத்துடனும் உங்கள் வேலையை செய்வோம்.திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மாதத்தின் நடுப்பகுதியில், உங்கள் துணையுடன் தொடர்புடைய எந்தவொரு பெரிய சாதனையும் உங்கள் மகிழ்ச்சிக்கு ஒரு பெரிய காரணமாக மாறும். உடல்நிலை சீராக இருக்கும்.

இப்படிக்கு நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...