இன்றைய ராசி பலன் (புதன்கிழமை 16 ஆகஸ்டு 2023)
மேஷம் : இன்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. உங்களின் சில சௌகரியங்களை நீங்கள் விட்டுக்கொடுக்க நேரும். பணிச்சூழல் கடினமாகக் காணப்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. வீட்டின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பிற்காக பணத்தை செலவு செய்வீர்கள். தேவையற்ற செலவுகளால் பண இழப்பு ஏற்படும்.
ரிஷபம் : இன்று உங்கள் வளர்ச்சிக்கு உகந்த நாள். வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொள்வீர்கள். புதிய அனுபவங்கள் கிடைக்கும். மகிழ்ச்சி காணப்படும். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படுகின்றது. நீங்கள் செய்யும் பணியில் திருப்தி காண்பீர்கள். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். பணத்தை முறையாக பயனுள்ள வழியில் செலவு செய்வீர்கள்.
மிதுனம் : ஆன்மீக பயணங்களுக்கு உகந்த நாள். உங்கள் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும். பொறுமையுடன் இருந்தால் நல்லதே நடக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க நேரிடும். நிதி வளர்ச்சிக்கு உகந்த நாள் அல்ல. உங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
கடகம் : இன்று சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்கும் நல்ல தரத்தை உருவாகுவதற்கும் அதிக சிந்தனை செய்வீர்கள். உணர்ச்சிவசப்படாமல் உங்களை காத்துக்கொள்ளுங்கள். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். சக பணியாளர்களுடன் சிக்கல்கள் வராமல் இருக்க அவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதிக வருமானம் சம்பாதிப்பது இன்று கடினமாக காணப்படும்.
சிம்மம் : இன்று அதிர்ஷ்டத்தை அதிகமாக நம்பாதீர்கள். கடினமாக உழைத்து பலனிற்கு காத்திருங்கள். இசை கேட்டல் திரைப்படம் பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மன அமைதி பெறுங்கள். இன்று பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட வேண்டியது அவசியம். பண இழப்பு காணப்படும். உங்களிடம் இருக்கும் பணத்தை தக்க வைத்துக் கொள்வது நல்லது.
கன்னி : இன்று உற்சாகமான நாள்.புதிய வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவீர்கள். உங்கள் செயல்களை திட்டமிட்டு முறையாக செய்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் நல்ல பெயரும் புகழும் அடைவீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக காணப்படும். இன்று பண வரவு காணப்படுகின்றது. உங்கள் சேமிப்பும் வாழ்க்கை தரமும் உயரும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம் : இன்று நீடித்த முயற்சிகள் எடுக்க வேண்டும். இன்று செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். பண வளர்ச்சி சிறப்பாக காணப்படுகின்றது. வங்கியிருப்பை சிறப்பாக பராமரிப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். தேக ஆரோக்கியம் உறுதியாக இருப்பதை உணர்வீர்கள்.
விருச்சிகம் : உங்கள் உணர்சிகளை கண்காணிக்க வேண்டும். பொறுமையும் நம்பிக்கையும் தேவை. நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றியை நோக்கி பயணிக்கலாம். பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணியை கவனமுடன் ஆற்ற சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். சரியான நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும். பணியில் நற்பெயர் கிடைக்கும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். அசௌகரியம் காரணமாக ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திப்பீர்கள்.
தனுசு : இன்று சிறிது அசௌகரியத்தை உணர்வீர்கள். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலைத் தரும். பணிச்சுமை காணப்படும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவது சிறந்தது. செலவுகள் அதிகமாக காணப்படும். சிறிய கடன்கள் வாங்கி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஒவ்வாமை காரணமாக இன்று சளி மற்றும் இருமலால் பாதிப்படைவீர்கள்.
மகரம் : இன்றைய நாள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படும். இன்று அதிர்ஷ்டம் காணப்படும். அதனால் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சியோடு பணி புரிய வேண்டும். உங்கள் திறமைகள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்களிடம் காணப்படும் பணம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் மகிழ்ச்சியான மன நிலை காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
கும்பம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்களை முன்னேற்றிக் கொள்வதற்கு உகந்த மன நிலையில் காணப்படுவீர்கள். திருப்தி காணப்படும். உங்கள் முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். பணியில் நேர்மையாக இருப்பீர்கள். சிறந்த அர்ப்பணிப்போடு பணியாற்றுவீர்கள். பண வளர்ச்சி இன்று சிறப்பாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம் : இன்று உங்கள் செயல்களில் தவறுகள் நேராமல் இருக்க பொறுமை அவசியம். இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து நடைபெறும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் சக பணியாளர்களிடம் நல்லுறவை பராமரிக்க வேண்டியது அவசியம். ஆன்மீக பயணத்திற்கு பணத்தை செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு ஆறுதலைத் தரும்.