வந்தேமாதரம்’ பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று

 வந்தேமாதரம்’ பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று

வந்தேமாதரம்’ பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று.💐

வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் காண்டல்படா கிராமத்தில் (1838) வசதியான குடும்பத்தில் பிறந்தார். வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். பள்ளியில் படிக்கும்போதே வங்கமொழியில் கவிதைகள் எழுதினார்.

கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். துணை மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினார். சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.

* முதல் நாவலான ‘துர்கேஷ் நந்தினி’ 1865-ல் வெளிவந்தது. அடுத்தடுத்து, பல நாவல்கள் வெளிவந்து வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. ‘

வங்க தர்ஷன்’ என்ற இலக்கிய இதழை 1872-ல் தொடங்கினார்.

இவரது கதைசொல்லும் பாணி தனித்துவமானது. இவரது அனைத்து படைப்புகளும் ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தனது படைப்புகள் வாயிலாக தேசிய உணர்வை மக்களிடம் எழுப்பினார்.

1882-ல் வெளிவந்த ‘வந்தேமாதரம்’ பாடல் இடம்பெற்ற இவரது ‘ஆனந்தமட்’ நாவல் நாடு முழுவதும் புகழ்பெற்றது.

* கல்கத்தாவில் 1896-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் பாடப்பட்டது. ‘தாயை வணங்குவோம்’ என்று பொருள்படும் ‘வந்தேமாதரம்’ கோஷம் இந்திர சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக மாறி, நாடு முழுவதும் ஒலித்தது. இது ஆங்கில அரசை நடுநடுங்க வைத்தது. இதை அடுத்து வன்முறையைத் தூண்டுவதாக கூறி இந்த கோஷத்தை அரசு தடை செய்தது. பின்னர் இப்பாடல் இந்திய தேசத்தின் கீதமாகப் புகழ்பெற்றது.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...