இன்றைய ராசி பலன் 23.06.2023

 இன்றைய ராசி பலன் 23.06.2023

மேஷம்

இன்று பதட்டமான சூழ்நிலைகள் காணப்படும். அதனை சமாளிப்பதற்கு கால தாமதமாகும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இது உகந்த நாள் அல்ல. சில சௌகரியங்களை விட்டுகொடுக்க நேரும்.உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். உறவில் நல்லிணக்கத்தைப் பேண அதனை தவிர்த்தல் நல்லது.வீட்டுப் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்ய நேரும்.  பணிகளின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம் 

இன்று ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டிய சூழல் ஏற்படும். அது உங்களுக்கு ஆறுதலைத் தரும்.இன்று வெற்றிகரமான பலன்களை காண்பதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இன்று பணிகள் நிலுவையில் இருக்கும். தாமதங்கள் காணப்படும்.இன்று கூடுதல் செலவினங்கள் காணப்படும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள்.இதனை தவிர்த்தல் நல்லது. தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதி பெறலாம்.

மிதுனம் 

இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். உங்களின் உறுதியும் தைரியமும் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். மொத்தத்தில் இன்று காணப்படும் வளர்ச்சி உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்.நீங்கள் உங்கள் துணையுடன் மனம் திறந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வீர்கள். பண வரவு காணப்படும்.உங்கள் மன உறுதி காரணமாக இன்று நல்ல ஆரோக்கியம் காணப்படும்.

கடகம் 

இன்று உற்சாகமான நிலையை பராமரிப்பீர்கள். அதிக சிந்தனைகளை தவிர்த்தல் வேண்டும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் அமைதி பெறலாம்.உங்களின் எரிச்சல் மனப்பான்மையை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையை நட்பு முறையில் அணுக வேண்டும்.செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். பணிகள் அதிகமாக காணப்படும்.

சிம்மம் 

இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க தெளிவான மனதுடன் இருக்க வேண்டும்.உங்கள் மனதில் தோன்றும் கசப்பு உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். பணிகள் கடினமாக காணப்படும். இன்று கூடுதலான தேவையற்ற செலவுகள் ஏற்படும். 

கன்னி 

இன்று பலன்களில் ஏற்றத்தாழ்வு காணப்படும். உங்கள் பணிகள் சுமுகமாக நடக்க நீங்கள் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். சில சமயங்களில் நம்பிக்கை இழப்பீர்கள். நல்ல பலன்களைப் பெற நம்பிக்கையோடு இருங்கள்.உங்கள் பிரியமானவரை புரிந்துகொண்டு நடந்து கொள்ளுங்கள்.இன்று நிதிநிலை சீராக இருக்காது. இன்று நிதிநிலையை சமாளிப்பது கடினம்.

துலாம் 

இன்று முன்னேற்றமான நாள். எதிர்காலம் பற்றிய பரந்த நோக்கு கொண்டிருப்பீர்கள். உங்கள் இலக்குகளில் வெற்றி பெற கடினமாக உழைப்பீர்கள். இடையில் ஏற்படும் தடைகளை முறியடிப்பீர்கள்.உங்கள் துணையிடம் நேர்மையாக விசுவாசமாக இருப்பீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.இன்று பலன் எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்றுங்கள்.உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற முடியம்.

விருச்சிகம் 

இன்று சுமுகமான பலன்கள் காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய இன்றைய நாளை பயன்படுத்துவீர்கள். உங்கள் வளர்ச்சி இன்று உறுதி. இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.உங்களின் நம்பிக்கை உணர்வுகளை உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்வீர்கள். இன்று பணபுழக்கம் சீராக இருக்கும். உங்கள் ஆற்றலை நிதி வளர்ச்சிக்கு பயன்படுத்துவீர்கள்.நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

தனுசு 

இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் இலேசாக எடுத்துக்கொள்ளவேண்டும். இன்று புதிய மனிதர்களின் சந்திப்பை பெறுவீர்கள். இதனால் உங்களின் தொடர்பு வட்டாரம் விரிவடையும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.உங்கள் துணையுடன் கருத்து வேற்றுமை அல்லது விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கூடுதல் பணிகள் காரணமாக இன்று மும்மரமாக காணப்படுவீர்கள். இன்று நிதிநிலைமை சுமாராக இருக்கும். 

மகரம் 

இன்று நீங்கள் தன்னம்பிக்கை இழக்கக் கூடிய கடினமான சூழ்நிலை காணப்படும். நம்பிக்கையுடன் சவால்களைக் கையாள வேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும்.உங்களின் சிறந்த பேச்சாற்றல் மூலம் உங்கள் துணையிடம் நல்லுறவை கொண்டிருப்பீர்கள். உங்கள் பிரியமானவரின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.தோல் சம்பந்தமான ஒவ்வாமை காணப்படும். 

கும்பம் 

இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாள். முன்னேற்றத்தை நோக்கி செல்வீர்கள். முக்கியமான முடிவுகள் இன்று பலன் தரும்.உங்களின் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உங்கள் பிரியமானவரை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருங்கள்.இன்று பணப்புழக்கம் திருப்தி அளிக்கும்.இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும். உங்கள் தனித் திறமைக்காக பாராட்டப்படுவீர்கள். 

மீனம்

இன்று நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களுக்கு சாதகமான பலன்களை தரக்கூடிய திட்டங்களை வகுப்பீர்கள்.பணியில் காணப்படும் பதட்டம் காரணமாக உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும்.இன்று பணபுழக்கம் சிறப்பாக காணப்படும்.பணியிடச் சூழல் முன்னேற்றகரமான பலன்களைத் தரும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...