ரத்தநாளப் புடைப்பு (Varicose vein) நோய் எதனால் வருகிறது? தீர்வு என்ன?

கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங் களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களுக்கு வெயின் (vein) என்றுபெயர்.

வெரிகோஸ் (Varicos) என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள்.

இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல் லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம்.

வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எத னால் வருகிறது

மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப் பதைப் போல் கீழ்நோக்கித் தொங்கியபடி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின் பெருங்கு டல் அடைக்கப்பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது, ரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல் புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆக, மலச்சிக்கல் தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப்படுகிறது.

அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது, ஒரே இடத்தில் கால்களை தொங்கவிட்டபடியே அசை வற்று உட்கார்ந்திருப்பது போன்றவற்றா லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவ தற்கான வாய்ப்பு உள்ளது.

ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப் புகள் அதிகம் உள்ளன. பாதங்களில் இருந்து ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும்போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளது. அது இயலா மல் போகும் போது, ரத்தம் மீண்டும் கீழ்நோக் கியே செல்லத் தொடங்கும். இதனால், ரத்த நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத் தும் வீங்கியும் காணப்படும்.

ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசை வில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடு கள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் யாருக் கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்

அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதிய பராமரிப் பின்மை, அசைவற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு வர வாய்ப்பு அதிகம்.

நீண்டநேரம் ஒரே இடத்தில் நின்றோ, அமர்ந்தோ வேலை பார்ப்பதனால் காலில் இருந்து இதயத் துக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தக்குழாய் களில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, ரத்தம் தேங்கி, அந்த ரத்தநாளங்கள் புடைத்து வெளியே தெரிவ தைத்தான் நாம் வெரிகோஸ் வெய்ன் என்று கூறுகிறோம்.

புடைத்துக்கொண்டு வெளிவருபவை நரம்புகள் அல்ல, இவை அசுத்த ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தநாளங்கள். இந்த நோய் வருவதற்குக் காரணம், காலத்தின் கட்டாயமாக அதிக நேரம் நின்று அல்லது அமர்ந்து வேலை பார்க்கும் எக்ஸ் போர்ட் கம்பெனி, சேல்ஸ் ரெப்ரஸன்டேடிவ்ஸ், டெக்னீசியன்ஸ், புரடக்சன் ஒர்க்,  டீக்கடை, கார் பென்ட, டெக்ஸ்டைல்ஸ், அதிக நேரம் நின்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஆசிரியர்கள், கண்டக்டர் போன்ற தொழில் செய்பவர் களுக்கு வெரிகோஸ் வெய்ன் நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக் கிறது.

இதைத் தடுப்பதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சி என்றால், அதிக நேரம் நின்று வேலை செய்யும் இடங்களில் சற்று அமர்ந்து அல்லது நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும். நீண்ட நேரமானால் நடுநடுவில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். ஓய்வு எடுக்கும் போது காலை நீட்டி வைத்திருக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை (மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள்) சிறிய நடை (Brisk walking) நடந்துசெல்ல வேண்டும். இது மாதிரி அவ்வப் போது செய்யும்போது தசை நார்கள் சுருங்கி விரிந்து ரத்த நாளங்கள் கீழிருந்து மேலாக இதயத்தை நோக்கிச் செயல் படும். இதனால் வீக்கம், வலி எல்லாம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

இதையும் தாண்டி வலி, வீக்கம் அதிகமாக இருந் தால் மருத்துவரை அணுகலாம். வெரிகோஸ் வெய்ன் நோய் அதிக நேரம் நிற்பதாலும் உட் கார்ந்திருப்பதாலும்தான் வருகின்றன என்றா லும் பிறப்பு காரணமாக ஐந்து சதவிதிம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர்களுக்கு இயற்கையாகவே ரத்தநாளத் திசுக்கள் கொஞ் சம் பலவீனமாகவே இருந்திருக்கும். இதனால் குடும்பத்தில் அம்மா, தங்கை, சித்தி பெண்கள் தரப்பிலும் வர வாய்ப் பிருக் கிறது. அதனால் தொடர்ந்து பல மணிநேரம் நிற்பதையும் உட் கார்ந்திருப் பதையும் தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!