வரலாற்றில் இன்று – 04.11.2020 ஜானகி அம்மாள்
தாவரவியல் நிபுணரும், மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளருமான ஜானகி அம்மாள் 1897ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கேரள மாநிலம் தலச்சேரியில் பிறந்தார்.
உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் சிரில் டார்லிங்டனுவுடன் இணைந்து தாவர குரோமோசோம் அட்லஸ் என்ற வரைபடத் தொகுப்பை 1945ஆம் ஆண்டு வெளியிட்டார். லண்டனில் உள்ள ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை மரபியலாளராகப் பணிபுரிந்தார்.
இந்திய தாவரவியல் சர்வே அமைப்பை சீரமைத்து, ஒருங்கிணைப்பதற்காக ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1951ஆம் ஆண்டு நாடு திரும்பினார். மேலும் இந்தியத் தாவரவியல் அமைப்பின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
பல கலப்பு மரபின வகைகளை உருவாக்கினார். கரும்பு சம்பந்தமாக இவர் மேற்கொண்ட உயிர் கலவியல் ஆய்வுகள் பல சிறப்பினக் கலப்பு, மரபினக் கலப்பு வகை கரும்புகளையும் உருவாக்க வழிவகுத்தன.
1956ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகம் இவருக்கு எல்எல்டி பட்டம் வழங்கியது. 1977ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். 2000-ஆம் ஆண்டில் வகைப்பாட்டியலுக்கான தேசிய விருது இவரது பெயரில் நிறுவப்பட்டது.
இந்தியப் பாரம்பரிய தாவரவியல் பற்றிய அறிவை திரட்டும் பணியில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட ஜானகி அம்மாள் 1984ஆம் ஆண்டு மறைந்தார்.
சகுந்தலா தேவி
இந்திய பெண் கணித மேதையான சகுந்தலா தேவி 1929ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்கள10ரில் பிறந்தார்.
இவர் ஜூன் 18, 1980ஆம் ஆண்டு லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க (அதாவது 7,686,369,774,870 ழூ 2,465,099,745,779 = 18,947,668,177,995,426,462,773,730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக,’கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.
புக் ஆஃப் நம்பர்ஸ், பெர்ஃபெக்ட் மர்டர், ஃபிங்கரிங் : தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ், இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ், அஸ்ட்ராலஜி ஃபார் யூ போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.
ஹ்யூமன் கம்ப்யூட்டர் அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1845ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி இந்திய விடுதலை இயக்க ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை வாசுதேவ் பல்வந்த் பட்கே மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார்.
1869ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.