இன்றைய தினப்பலன்கள் (27.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (27.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

வீரதீர செயல்களை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களிடம் தனம் சார்ந்த உதவிகளை எதிர்பார்ப்பீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கிருத்திகை : திருமணம் கைகூடும்.

ரிஷபம் :

குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்லவும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.

மிதுனம் :

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். தாயாருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : ஆதாயம் ஏற்படும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.

கடகம் :

புதிய முயற்சிகள் செய்வதில் சிந்தித்து செயல்படவும். கலை சம்பந்தமான அறிவால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மூலிகை மருந்துகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். புதிய சூழல்களால் எதிர்பாராத சில வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம் :

செய்கின்ற பணியில் திருப்தியான சூழ்நிலை அமையும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். திட்டமிட்ட செயல்பாடுகளின் மூலம் நற்பெயர்கள் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : திருப்தியான நாள்.
பூரம் : மனம் மகிழ்வீர்கள்.
உத்திரம் : வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கன்னி :

கமிஷன் அடிப்படையிலான தொழிலில் இலாபம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் உறவுகளின் ஆதரவுகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : இலாபம் அதிகரிக்கும்.
அஸ்தம் : ஆதரவுகள் கிடைக்கும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.

துலாம் :

பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். பிடிவாத குணத்தை தவிர்த்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.

விருச்சிகம் :

நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களினால் ஆதாயம் ஏற்படும். எண்ணிய செயலை செய்து முடிப்பதில் சில காலதாமதம் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : காரியசித்தி உண்டாகும்.
அனுஷம் : ஆதாயம் ஏற்படும்.
கேட்டை : தனவரவுகள் உண்டாகும்.

தனுசு :

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர்களின் வருகை ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : நெருக்கம் உண்டாகும்.
பூராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

மகரம் :

வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருக்கும் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சூட்சமங்களை கற்பீர்கள்.
திருவோணம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.

கும்பம் :

வியாபாரம் தொடர்பான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : மனக்கசப்புகள் அகலும்.

மீனம் :

எளிதாக முடிய வேண்டிய சில விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை சிறிது அலைச்சலுக்கு பின்பு விற்பீர்கள். உத்தியோகத்தில் ஞாபகமறதியால் சில பிரச்சனைகள் வந்து நீங்கும். பகைமையை மறந்து நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : போராட்டம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
ரேவதி : நிதானத்துடன் செயல்படவும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...