எண்ணுார், மணலியில் வீடுகளில் புகுந்த மழைநீர்..!

 எண்ணுார், மணலியில் வீடுகளில் புகுந்த மழைநீர்..!

எண்ணுார், திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர் போன்ற பகுதிகளில், சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் எண்ணுார், பாரதியா நகர் – நேதாஜி நகர் வரையிலான, எண்ணுார் விரைவு சாலையில், 500 அடி துாரத்திற்கு முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது.

எண்ணுார், தாழங்குப்பம் கடற்கரையில் பலத்த காற்று வீசி, மணல் சுழன்றடித்ததால், ஸ்கூட்டர், பைக், இலகுரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்பகுதியில், தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கியிருக்கும், 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தவிப்பிற்குள்ளாகினர்.

பகிங்ஹாம் கால்வாயில், இயல்பை காட்டிலும், 5அடி உயரத்திற்கு மழைநீர் ஆர்பரித்து செல்வதால், 4, 6, 7 ஆகிய வார்டுகளில், இணைப்பு கால்வாய்களின் மதகுகள் அடைக்கப்பட்டு, ராட்சத மின்மோட்டார்கள் வழியாக, மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏழாவது வார்டின், ராஜாஜி நகர், வெற்றி விநாயகர் நகர் பகுதிகளில், 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

மணலிபுதுநகர், இடையஞ்சாவடியில், காற்றில் மின்வயர் அறுந்து விழுந்ததில், சுரேஷ்குமார், என்பவருக்கு சொந்தமான எருமைமாடு ஒன்று பலியானது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...