இன்றைய ராசி பலன்கள் ( 12 டிசம்பர் செவ்வாய்க்கிழமை 2023 )

 இன்றைய ராசி பலன்கள் ( 12 டிசம்பர் செவ்வாய்க்கிழமை 2023 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 12ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் எளிதான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகள் நல்ல பலனைத் தரும். இன்று புதிய பணி வாய்ப்புகளை இழக்கும் அதிர்ஷ்டமற்ற நிலை காணப்படும். இன்று ஏமாற்றமான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். இதனால் உங்கள் மன உறுதியை இழந்து விடாதீர்கள். இன்று பண வரவிற்கான வாய்ப்பு குறைவு.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று உங்களிடம் தைரியமான உறுதியான அணுகுமுறை காணப்படும். உங்கள் இலக்குகளில் வளர்ச்சியும் வெற்றியும் அடைவீர்கள். பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் செயல்திறனில் நல்ல தரத்தை பராமரிக்க இயலும். அதிக பண வரவு காரணமாக உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். உங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்களிடம் காணப்படும் மன உறுதி காரணமாக இன்று முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் நம்பிக்கையுடன் உங்கள் செயல்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். அவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.உங்கள் செயல்திறன் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.. இன்று பண வரவு அதிகமாக காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

கடக ராசி அன்பர்களே!

இன்று சவாலான சூழ்நிலைகள் காணப்படும். அதனால் வெறுமையை உணர்வீர்கள். உறுதியான போக்கை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உங்கள் கடின உழைப்பிற்கு தகுத்த பலன்கள் கிடைக்காது. இதற்குஉங்கள் பணிகளை சிறப்பாக திட்டமிடாததே காரணம். இன்று லாபம் நஷ்டம் இரண்டும் சேர்ந்து காணப்படும். பணப்புழக்கம் குறைவாக காணப்படும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும்.. ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இந்தச் சூழலைக் திறமையாகக் கையாள முடியும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. பயனுள்ள யுத்திகளைக் கையாண்டு கவனமாக பணியாற்றினால் பணிகள் சுமூகமாக நடக்கும். இன்று வரவும் செலவும் இணைந்து காணப்படும். பணத்தை கையாளும் போது கவனம் தேவை. இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் சிறந்த மன ஆற்றலுடனும் காடுப்பட்டுடனும் காணப்படும் சிறந்த நாள். இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் அமைதி பெறுவீர்கள். இன்று பணிகளை குறித்தநேரத்தில் முடிக்கும் சூழல் காணப்படும். பணிகளை விரும்பி எளிதாக ஆற்றுவீர்கள். பணப்புழக்கம் இன்று சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலா ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் உங்கள் இலக்குகளில் வெற்றி அடையலாம்.பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்தி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் பணியில் சில தடைகள் காணப்படும். உறுதியுடன் இருந்தால் தடைகளை சமாளித்து சிறப்பாக செயலாற்றலாம். பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது.

விருச்சிக ராசி அன்பர்களே!

அமைதியாக இருப்பதன் மூலம் முறையான முடிவுகளை எடுக்க இயலும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் பதட்டமின்றி சமநிலையில் இருக்கலாம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் பணியில் தவறுகள் நேரலாம். எனினும் கவனமாகப் பணியாற்றினால் இன்று சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. அதிகரிக்கும் பொறுப்புகளை சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள். பதட்டம் காரணமாக முதுகு வலி ஏற்படலாம்.

தனுசு ராசி அன்பர்களே!

இன்று பதட்டமும் கவனமின்மையும் காணப்படும். இதனை சமாளிக்க அமைதியை மேற்கொள்ள வேண்டும். இன்று சகஜமான அணுகுமுறையுடன் உங்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் பதட்டம் காரணமாக தாமதமாக பணிகள் நடைபெறும். பணிகளைக் கையாளும் போது பொறுமையான அணுகுமுறை தேவை. பணப்புழக்கம் குறைந்து காணப்படும் . அதிகரிக்கும் செலவுகள் உங்களுக்கு கவலையை அளிக்கும். அதிக பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படலாம்.

மகர ராசி அன்பர்களே!

உங்கள் மன உறுதி காரணமாக நீங்கள் வெற்றி பெறலாம். இன்று சிறந்த முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும். அது உங்கள் செயல்திறனில் பிரதிபலிக்கும். உங்கள் சக பணியாளர்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். இன்று போதிய அளவு பணம் காணப்படும். உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும். இன்று உங்களிடம் அதிக ஆற்றல் காணப்படும். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று ஸ்திரமான. இலக்குகளை வெல்லக்கூடிய இனிமையான தருணங்களை சந்திக்கும் நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். புதிய பணி வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் கடின உழைப்பின் காரணமாக நீங்கள் ஊக்கத்தொகை வகையில் பணம் பெறுவீர்கள். உங்களிடம் காணப்படும் மன உறுதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனராசி அன்பர்களே!

இன்றைய நாள் உங்கள் எதிர்பார்ப்பின் படி இருக்காது. எதிர்மறையான பலன்கள் ஏமாற்றத்தை தரும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களையும் பாதுகாப்பின்மை உணர்வையும் தவிர்த்தல் வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். பண வரவு குறைந்து காணப்படும். கோபத்தின் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...