இந்த நாள் இனிய நாள்இன்றைய ராசி பலன் (வியாழக்கிழமை 07 செப்டம்பர் 2023)

 இந்த நாள் இனிய நாள்இன்றைய ராசி பலன் (வியாழக்கிழமை 07 செப்டம்பர் 2023)

மேஷம் : இன்று செய்ய வேண்டிய காரியங்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம். உங்கள் அணுகுமுறையில் அமைதியும் உறுதியும் அவசியம். இன்று பணிகள் சுமுகமாக நடப்பதற்கு சாத்தியமான நாளாக அமையாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது. நிதிநிலைமை அனுகூலமாக இருக்காது.

ரிஷபம் : உங்கள் செயல்களை உறுதியுடன் மேற்கொள்வதற்கு மிகுந்த பொறுமை அவசியம்.செயல்களில் தாமதம் நேரலாம். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். எனவே பணிகளை திட்டமிட்டு செய்ய வேணடியது அவசியம். தேவையற்ற் கூடுதல் செலவினங்களை சந்திக்க நேரலாம். நீங்கள் மிகவும் சோர்வாகவும் அசௌகரியமாகவும் உணர்வீர்கள்.

மிதுனம் :  இன்று பலன்கள் கலந்து காணப்படும். அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம் மற்றும் நல்லது. உங்களிடம் காணப்படும் சிறப்பான திறமை காரணமாக உங்கள் பணிகளை நன்றாக செய்வீர்கள். உங்கள் பணிக்கு அங்கீகாரம்; கிடைக்கும். இன்று பணவரவு அதிகமாக காணப்படாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கடகம் : உங்களிடம் காணப்படும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை விரைந்து எடுப்பதற்கு உங்கள் மனமும் விரைவாகச் செயல்படும். இன்று சிறந்த வெற்றி கிடைக்கும். இன்று வளர்ச்சி காணப்படும். வசதியுடன் இருப்பீர்கள். இன்று மிகுந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனம் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : உங்கள்அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடச் சூழலில் சில ஏமாற்றங்களை உணர்வீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு குறைந்து காணப்படும். அதனால் பணி வளர்ச்சி பாதிக்கப்படும். செலவுகளும் பொறுப்புகளும் அதிகரிக்கும் காரணத்தால் இன்று கணிசமான தொகை சேமிக்க இயலாது. நீங்கள் உறுதியுடன் காணப்படுவீர்கள்.

கன்னி : ஆன்மீகச் செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி காணலாம். முன்னேறுவதற்கு முயற்சி செய்யுங்கள். அதற்கு தேவையான முக்கியமான விஷயங்களில் ஒன்று கடவுள் வழிபாடு. இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். குறைந்த அளவு பணமே காணப்படும்.

துலாம் : நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். நேர்மறையான அணுகுமுறை அவசியம். தியானம் மற்றம் பிரார்த்தனை உங்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும். இன்று முடிக்க வேண்;டிய பணியில் உங்கள் சக பணியாளர்களுடன் சில மோதல்கள் காணப்படும். இன்று மகிழ்ச்சிகரமான நாளாக அமையாது. பண இழப்புகள் காரணமாக உங்கள் கையிருப்பு கரையும் வாய்ப்பு காணப்படுகின்றது.

விருச்சிகம் : இன்றைய நாள் சமநிலையுடன் காணப்படும். நீங்கள் நினைத்ததை அடைவதற்கு குறைந்த அளவு முயற்சியே போதுமானதாக இருக்கும். உங்களுடைய இலக்குகளும் இலட்சியங்களும்; சற்று இலகுவாக இருக்க வேண்டும். நீங்கள் பணியாற்றும் விதத்தில் முன்னேற்றம் காணப்படும். இன்று அதிர்ஷ்டத்தின் சாயல் காணப்படும். இன்று நல்ல ஆரோக்கியம் காணப்படும்.

தனுசு  :   இன்றைய நாள் அபாரமான நாளாக இருக்கும். உங்கள் தொடர்பாடல் திறமை மூலமாக உங்கள் பிரியமானவர்களின் இதயத்தில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும் திறம்பட செயலாற்ற கால அட்டவணையை பின்பற்ற வேண்டும். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் காணப்படாது.

மகரம் : எதையோ இழந்தது போன்று உணர்வீர்கள். சோர்வுடன் காணப்படுவீர்கள். அதனை தவிர்த்து சுறுசுறுப்புடனும் நேர்மறை எண்ணத்துடனும் இருக்க முயலுங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் உங்களின் வேலையின் தரம் குறைந்து காணப்படுவதன் காரணமாக உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளின் கேள்விக்கு ஆளாகும். கூடுதல் சுமைகள் காரணமாக இன்று பணத்தை அதிக அளவில் செலவு செய்ய நேரிடும்.

கும்பம் : எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வெற்றி காண்பது கடினம். பணியில் அதிக பொறுப்புகளை சுமக்க நேரிடும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் மேலான கவனம் பணியில் முன்னேறிச்செல்ல வழிகாட்டும். பணவளர்ச்சி காண்பது கடினமாக இருக்கும். பணஇழப்புகள் ஏற்படலாம்.

மீனம் : இன்றைய நாள் துடிப்புடன் காணப்படும். வெற்றிக்கான முயற்சி செய்வீர்கள். திடமான சிந்தனையும் செயலாக்கமும் காணப்படும். வெற்றிக்கான உங்கள் முயற்சி ஜெயிக்கும். உங்கள் பணியில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.எனவே பணியில் கவனமாக இருப்பது நல்லது. உங்களிடமுள்ள பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள். நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...