இன்றைய ராசி பலன்கள் (11 ஏப்ரல் சனிக்கிழமை  2026)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 11-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத உற்சாகம் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளின் வருகையால் உற்சாகமும் செலவுகளும் ஏற்படக்கூடும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய் வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன், சிலர் கடன் வாங்கவும் நேரிடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.மாலையில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. மாலையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்றைக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

மகரராசி அன்பர்களே!

இன்றைக்கு உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். எதிரிகளால் பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளால் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

மீனராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!