இன்றைய ராசி பலன்கள் ( 16 பிப்ரவரி வெள்ளிக்கிழமை  2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( 16 பிப்ரவரி வெள்ளிக்கிழமை  2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 16ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

சோபகிருது வருடம் மாசி மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 16.02.2024, சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.04 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று பிற்பகல் 02.34 வரை பரணி. பின்பு கிருத்திகை. உத்திரம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும். உறவினர்களால் குடும்பத் தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத் தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படும். முருகப்பெருமானை வழிபட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் செலவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற் சிக்கு வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருப்பார். சிலருக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அம்பிகையை வழிபட சங்கடங்கள் தீரும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக் கியம் மேம்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். அதிகாரிகளின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபா ரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள். பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக் கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். பணி யாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். துர்கையை வழிபட எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட் டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உடல் நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது வார்த்தை களில் கவனமாக இருக்கவும். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். சிவ வழிபாடு சிரமம் குறைக்கும்.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும்.வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகள் எதை யும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். உங்கள் முயற்சிகளுக்கு பங்கு தாரர்களின் ஆதரவு கிடைக்கும். அம்பிகையை வழிபட மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலை யில் உறவினர் ஒருவர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்களில் சிறுசிறு தடைகள் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்க் கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைகளால் அலைச்சலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். இன்று பிரச்னைகள் நீங்க, விநாயகரை வழிபடுவது நன்று.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறு மையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களைக் குறைக்கும்.

கும்பராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நி யோன்யம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. குடும்ப உறுப் பினர்களின் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் கூடுதலாகும்.

மீனராசி அன்பர்களே!

பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். மற்றவர்களு டன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகர மாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது அவ சியம். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவ தன் மூலம் தடைகள் நீங்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...