‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானது

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதனால் லலித் தயாரிப்பில் உருவாகியிருந்த ‘ஹாய்’ படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவித்துள்ளது படக்குழு.

ஏப்ரல் 3-ம் தேதி ‘எல்.ஐ.கே’ வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்ட பலர் பிரதீப் ரங்கநாதன் உடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் பணிபுரிந்துள்ளார்.

’எல்.ஐ.கே’ வெளியாக இருப்பதால், ‘ஹாய்’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களையுமே லலித் குமார் தயாரித்துள்ளார். ‘எல்.ஐ.கே’ பட விவகாரத்தில் லலித் குமார் – விக்னேஷ் சிவன் இருவருக்குமே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவை சரி செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!