2002 ஓஸ்லோ அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துத் திரும்பிய சிலிர்ப்பான அனுபவத்தை ’குமுதம்’ இதழில் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மகேந்திரன். எப்போது எத்தனை முறை படித்தாலும் திகட்டாத பதிவு இதோ… திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த ‘சாசன’த்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வ மாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தை யாக மறுப்புச் […]Read More
எழுத்து : கிறிஸ்டி நல்லரெத்தினம், ஆஸ்திரேலியாஉலகின் பல செல்வந்தர்கள் இன்று நடக்கவிருக்கும் ஏல விற்பனையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து இங்கு கூடி இருக்கின்றனர். அவர்களுடன் ஒன்றரக் கலந்து ஒரு உருவம், கடைசி இருக்கையில் அமர்ந்து, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காவண்ணம் மெதுவாக கையில் இருந்த ஒரு தொலை யியக்கியை – remote control device – ஒரு முறை பார்த்து புன்னகைத் துக் கொள்கிறது.ஏலம் ஆரம்பமாகிறது!இடம்: சதபி ஏல விற்பனைக் கூடம் (Sotheby’s Auction House), லண்டன்காலம்: அக்டோபர் […]Read More
திரு.ஜெயபால் இரத்தினம் அவர்கள் எழுதிய ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா. வும் பெரம்பலூரும்’ என்கிற ஆய்வு நூல் உ.வே.சா.வைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள படிக்கவேண்டிய சிறந்த நூல். இந்த நூல் பெரம்பலூர் மக்கள் மட்டுமின்றி எல்லா ஊர் மக்களும் படித்துப் பாதுகாக்க வேண்டிய அருமையான நூல். இந்த நூலுக்காக நூலாசிரி யர் திரு.ஜெயபால் இரத்தினம் எழுதிய முன்னுரையின் சுருக்கம் இங்கே. பக்கங்கள் 160, விலை ரூ.150, வெளியீடு, விச்சி பதிப்பகம், 255DA / 57A முதன்மைச் சாலை, சாமியப்பா […]Read More
தினத்தந்தி பத்திரிகையின் ஆசிரியராக பல்லாண்டுகள் இருந்து அதன் வளர்ச்சி யில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்கள். அவருக்குத் தற்போது 88 வயது. அதை முன்னிட்டு அவரின் 80வது ஆண்டு மலரில் திரு. கோமல் அன்பரசன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கே. பச்சை கோடு போட்ட பாலியஸ்டர் வேட்டியும், சந்தன வண்ண சட்டையுமாக பரிவும் கனிவும் அறிவுத் தெளிவும் நிறைந்த முகத்தோடு திகழும் அய்யா ஐ.சண்முகநாதன் அவர்களைப் பார்க்கும்போதே நமக்குள் இனம் புரியாத அன்பும் ஈர்ப்பும் ஏற்படும். […]Read More
நீதிக்கட்சி முதல் அமைச்சரவை அமைத்தபோது முதல்வராக பதவியை ஏற்க விரும்பாதவர், பார்ப்பனர் அல்லாதார் கல்வி, அரசுப் பதவி மற்றும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் எனக் கனா கண்டவர் வெள்ளுடைவேந்தர் சர் தியாகராயர். வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் இந்தியாவில் கால்ஊன்றி ஆட்சி யைப் பிடித்தான். ஆநிரை மேய்பவர்களாக வந்த ஆரியர்கள் நம் வாழ் வையே பிடித்துக்கொண்டனர். முடைநாற்ற மூடநம்பிக்கையை விதைத்து, வர்ணபேதத்தை உண்டாக்கி, சாதிப்பிரிவை தோன்றுவித்து, மனிதர்களிலே ஏற்றத்தாழ்வை விளைவித்து, தான் லாபம் அடைந்து, பெருவாரியான […]Read More
பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போதே மூவர்ணக் கொடி பிடித்து, பாரதி யாரின் தேசிய எழுச்சிமிக்க பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவில் சென்றவர். பதினான்காவது வயதிலேயே சொந்த ஊரை விட்டுச் சென் னைக்கு வந்தார். சிறுவனாக இருக்கும்போதே கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்ததனால் மார்க்சியச் சித்தாந்தக் கருத்தோட்டம் உடையவராக வளர்ந்தார் அவர்தான் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன். தமிழ்ச் சிறுகதை உலகில், இன்றுள்ள காலகட்டத்தை ஜெயகாந்தனின் காலம் என்று குறிப்பிடும் அளவிற்கு ஜெயகாந்தன் கதைகள் இலக்கியத் தரமும், ஜனரஞ்சகமும் உடையனவாகத் […]Read More
கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்புப் பாலமாக இருப்பது புத்தகம். தலைமுறைகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையி லான பாலமும் புத்தகம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பு. புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவு கின்றன என்றும், மனிதகுலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல் களைக் கொண்டாடும் நோக்கத் துடன் 1995ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23ஆம் தேதியை உலகப் புத்தக மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாடி வருகிறது. சர்வதேச […]Read More
அம்பேத்கர் வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின்14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பே வாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப் பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் […]Read More
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம் உரி கிராமத்தின் விடஸ்தா நதிக்கரையில் அமைந்துள்ளது தத்தா மந்திர். 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகக் கருதப்படும் இக்கோயில் மூலவராக மகாவிஷ்ணு உள்ளார். இந்தக் கோயில் அருகே ‘பீம் கா மட்கா’ (பீமன் மண்பானை) உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த மண்பானையில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும் குறைவதே இல்லை. சுமார் 5 அடி ஆழம் மண்ணில் புதைக்கப்பட்டுள்ள இந்த மண்பானையிலிருந்து தண்ணீர் எடுத்துதான் தினந்தோறும் மகாவிஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது […]Read More
பேப்பர் விலை ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏப்ரல் 1 முதல் ‘ஆப்செட் பிரின்டிங்’ பணிகளுக்கு 40 சதவிகித கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட் டுள்ளது. சேலம் மாவட்ட பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்கச் செயலர் விஸ்வ நாதன் கூறியதாவது: “வெளிநாட்டில் இருந்து பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதைக் காரணம் காட்டி பேப்பர் விலை 2021 பிப்ரவரி முதல் அதிகரிக் கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிரசித்திப் […]Read More