Tags :மர்மத் தொடர்

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 22 | சாய்ரேணு

ஜங்க்ஷன் (நிறைவு) ஒருவிநாடி திக்கித்து நின்றானாயினும், போஸ் உடனே சுதாரித்துக் கொண்டான். போலீஸ் டு-வே ரேடியோவையும் மொபைலையும் மாறிமாறி இயக்கினான். எப்படியோ சிக்னல் பிடித்துவிட்டான். தர்மாவை எல்லோருமாகக் கவனமாக இறக்குவதற்குள் ப்ளாட்ஃபார்மில் வீல்-சேர் தயாராக இருந்தது. வெளியே வந்ததுமே ஆம்புலன்ஸ் அலறிக் கொண்டு வந்துவிட்டது. ஆம்புலன்ஸில் தர்மாவின் ஸ்ட்ரெச்சருக்கு எதிரே போடப்பட்டிருந்த பெஞ்சில் போஸ் அமர்ந்தான். தர்ஷினியும் அவன் அருகிலேயே அமர்ந்தாள். தன்யா சற்றுத் தள்ளி உட்கார்ந்துகொண்டாள். மனதில் அலையலையாய்ப் பயம் ஓடியது. * பிழைத்துவிடுவான். வயிற்றில்தானே […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 21 | சாய்ரேணு

19A. யாத்திரையின் முடிவு! “ஒரு சர்க்கிள் சங்கர் குடும்பத்தைச் சுற்றிவிட்டு வெளியே வந்துட்டோம், இல்லையா?” என்று கேட்டாள் தர்ஷினி. “இந்த ட்ரெயினில் ஸ்ரீனியோடு சம்பந்தப்பட்ட ஒரே நபர் – ஸ்ரீஜா. அவரும் சுப்பாமணியால் மிரட்டப்பட்டவர், அதுவும் உங்கள் எல்லோரையும்விட மிகக் காட்டமான, நிகழ்காலத்தியதான, எதிர்காலத்தையே பாதிக்கின்ற மிரட்டல். அவர்தான் உங்களில் துப்பாக்கி கொண்டுவந்தவர். அவர்தான் இங்கே உண்மையில் அவுட்ஸைடர். அவர் உங்களோடு ட்ராவல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை…” “புல்ஷிட்!” என்று அலறினாள் ஸ்ரீஜா. “எனக்கு எப்போதுமே […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 20 | சாய்ரேணு

19. யாத்திரைக்கே! “ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு பயணம், ஒரு யாத்திரை. அது எப்போது முடியும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம். சுப்பாமணியுடைய வாழ்வும்கூட ஒரு பாடம்” என்றாள் தன்யா, கூக்குரல் சற்று அடங்கியதும். “இந்தத் தத்துவம் எல்லாம் சரிதான், எங்க மேல பழிபோடறதை முதலில் நிறுத்துங்க” என்றார் தேவா கோபமாக. “ஏன் கோபப்படறீங்க சார்? விஷயத்துக்கு வந்துடுவோம். தர்மா தான் கேபினில் பார்த்தது ஒரு அட்டெண்டரோன்னு நினைச்சான். அதுக்குக் காரணம் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 18 | சாய்ரேணு

17. ரூபாய் “கோஷ் டாம் இட்!” என்றாள் தன்யா. எல்லா கேபின்களும் வெளியே தாழிடப்பட்டிருந்தன. “டாய்லெட்” என்று பாய்ந்தாள் தன்யா. அங்கே யாருமில்லை. ஆனால்… திட்டுத் திட்டாக ரத்தம். “மை… காட்…” என்று பதறிய தன்யா “டைனிங்-கார்…” என்று அக்கதவைத் தள்ளினாள். பாத்ரூமுக்கும் டைனிங்காருக்கும் இடைப்பட்ட சிறிய பகுதியில் தரையில் அமர்ந்து பெரிய பெரிய மூச்சுகளாக வாங்கிக் கொண்டிருந்தான் தர்மா. “என்ன பண்ணிட்டிருக்க இங்கே? இதுதான் காவல் காக்கிற லட்சணம்!” பொரிந்தாள் தன்யா, தன் பதட்டத்தை மறைக்குமுகமாக. […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 17 | சாய்ரேணு

16. காப்பிட்ட பெட்டி “லாக்கர்ஸ்” என்றாள் ஸ்ரீஜா. “இதை நான் முதலிலேயே யோசிச்சிருக்கணும்.” தன்யாவும் தர்ஷினியும் மௌனமாக அவள்கூட நடந்தார்கள். “அதுதான் மறைவானது, அதுதான் பாதுகாப்பானது, அதுதான் நீங்க தேடாதது” – தொடர்ந்தாள் ஸ்ரீஜா. தர்மா சற்றுப் பின்னால் நடந்தான். அவன் கண்கள் பரபரவென்று அலைந்தன. எல்லோரும் டைனிங் காரில் இருக்கிறார்கள், கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும்… தன்யா கொலைகாரனை நெருங்கிவிட்டாள் என்ற செய்தி இதற்குள் அந்த நபருக்கு எட்டியிருக்கும். பொறியில் அகப்பட்ட எலி நார்மலாக நடந்துகொள்ளாது. அங்குமிங்கும் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 16 | சாய்ரேணு

15. படுக்கை கீழ்ப் பர்த்தில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் இராணி கந்தசாமியின் முகம் அமைதியாக, தெளிவாக இருந்தது. அவள் நெஞ்சில் தெரிந்த செந்நிற ஓட்டையை விட்டுவிட்டால், அவள் நிம்மதியாகத் தூங்குவது போலவே தோன்றும். “டேம் யூ, இடியட்ஸ்” என்றாள் ஸ்ரீஜா, தன்யாவும் தர்ஷினியும் உள்ளே நுழைந்ததும். குனிந்து இராணி கந்தசாமியின் உடல்மீது பார்வையைப் போட்டிருந்த தன்யா “வாட் டு யூ மீன்?” என்றாள் அமைதியாக. “உங்களைத்தான் சொன்னேன். நியாயமா பார்த்தா நான் என்னைச் சொல்லிட்டிருக்கணும்! உங்களை நம்பி இவ்வளவு […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 15 | சாய்ரேணு

14. கோவணம் “ஏதோ ஒரு ஊரில் கோவணம் கட்டியவன் முட்டாள்னு சொல்வாங்க. நான் அப்படி ஒரு முட்டாள்” என்று ஆரம்பித்தார் சந்திரசேகர். ஏனோ தன்யாவுக்கு அவரிடம் கேள்விகள் போடத் தோன்றவில்லை. மௌனமாகவே இருந்தாள், அவராகவே பேசட்டும் என்று. “சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸ்க்கும் முன்னால், சங்கருடைய அப்பா நடத்திட்டிருந்த காம்-கெம்ஸில் நான் முதன்முதலா ட்ரெய்னியா சேர்ந்தேன்… அந்த ஃபாக்டரி மூடப்படறதைப் பார்க்கற துரதிர்ஷ்டம் எனக்கு இருந்தது. அப்புறம் கொஞ்சநாள் கெம்ஃபாப் ஆல்கலீஸ்ல வேலை பார்த்தேன். சங்கரும் ஸ்ரீனியும் சேர்ந்து இண்டஸ்ட்ரி […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 14 | சாய்ரேணு

13.செருப்பு தன்னை யாரோ செருப்பால் அடித்துவிட்டது போன்ற வலியில் தேவசேனாபதி அயர்ந்து அமர்ந்திருக்க, அதைக் கவனிக்காமல் தர்மா தத்துவம் பேச ஆரம்பித்தான். “ஒரு ஆணுக்கு மிக முக்கியமானது அவனுடைய பர்ஸ். அதே போலப் பெண்களுக்கு ஹேண்ட்-பேக். அவர்களுடைய பர்சனாலிட்டியின் ஒரு பாகம் அது. சொல்லப் போனால் ஒருவருடைய அவருடைய பர்ஸ் அல்லது ஹேண்ட்-பேக் அவருடைய குணங்களின் கண்ணாடி என்றே சொல்லலாம். “சாதாரணமாக, பர்ஸ் என்பது நம்முடைய பணம் ப்ளஸ் நம்மை அடையாளம் காட்டும் டாக்குமெண்ட்ஸ் இவைகளைத்தான் பிரதானமாகக் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 12 | சாய்ரேணு

12. சால்வை ட்ரெயினில் கொடுக்கப்பட்டிருந்த சால்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கலிவரதனும் காமுப் பாட்டியும் அமர்ந்திருந்தார்கள். “நமஸ்காரம்” என்றவாறே உள்ளே நுழைந்தார்கள் தர்மா, தன்யா, தர்ஷினி. கலிவரதன், காமுப் பாட்டி இருவரும் தங்கள் கேபினிலேயே அவர்களைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டதால் இங்கே வந்திருக்கிறார்கள். “வாங்கோ” என்றாள் காமுப் பாட்டி. கலிவரதன் லேசாகத் தலையை மட்டும் அசைத்தார். ஆரம்ப அறிமுகங்கள் முடிந்ததும் “சுப்பாமணி – அவரைப் பற்றிச் சொல்லுங்கோ” என்று கேட்டுக் கொண்டாள் தன்யா. காமுப் பாட்டி ஏதோ பேச […]Read More