Tags :சரித்திரத் தொடர்கதை

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 15 | ஜெயஸ்ரீ அனந்த்

சிகப்பியும் சலீம் மாலிக்கும் குதிரையில் அதிவேகமாகச் சென்றனர். உப்பூர் அருகே இருவரும் கடற்கரையை ஒட்டியபடி சென்றதும் சிகப்பி குதிரையின் வேகத்தைக் குறைத்தாள். கடல் அன்னை தனது கைகளால் சிப்பிகளையும் முத்துகளையும் கரைதனில் ஒதுக்கிக் கொண்டும், பிறகு அள்ளிக் கொண்டும் சென்றாள். தூரத்தில் தெரிந்த படகுகள் கலங்கரை விளக்கின் உதவியால் கரைகளை நோக்கி வந்து கொண்டிருந்தன. “நாம் உப்பூர் வந்தாகிவிட்டது.” என்றவள் குதிரையை ஊருக்குள் திருப்பினாள். ஊருக்குள்ளே இருந்த வைணவ மடத்தில் உரத்த குரலில் பாகவதர் ஒருவர் பஜனைப் […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 14 | ஜெயஸ்ரீ அனந்த்

சிவிகையிலிருந்து இறங்கிய அரசரை கண்டதும் தேவி அகிலாண்டேஸ்வரி இருகரம் கூப்பி அவரை வரவேற்றாள். தாயாரைக் கண்டதும், இளவரசர் முத்துவடுகநாதரும் அவரின் கால்களை தொட்டு வணங்கினார். “எழுந்திரு குழந்தாய். வாருங்கள். அனைவரும் நலமாக உள்ளீர்கள் தானே?” என்றாள். “ஆம் தேவி. தற்பொழுது வரை நலமே… அன்னை எப்படி இருக்கிறார்கள்?” “அவர்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் நியாபகமும் அந்த ஈசனின் நியாபகமும் தான். நமச்சிவாய மந்திரத்தை ஸ்ரமணம் செய்தபடி இருப்பார்கள். வாருங்கள் அவர்களை காணலாம்” என்று அவர்களை அழைத்துக் கொண்டு குடிலுக்குள் […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 13 | ஜெயஸ்ரீ அனந்த்

“பார்த்தால் தெரியாது, பழகினால் தெரியும்.” என்ற சிகப்பி, சலீம் மாலிக்கை கண்களால் எச்சரித்தாள். புரிந்து கொண்ட மாலிக்கும் தனது பேச்சை மாற்றி புத்தி பேதலித்தவன் போல் பிதற்றினான். “ஐம்பது குதிரை… ஐம்பது குதிரை .. ம்ஹா…. ரெண்டு வெள்ளிக் காசு… நீ வெள்ளிக் காசு பார்த்து இருக்கியா? என்கிட்ட நிறைய வெள்ளிக் காசு இருக்கு. அது எல்லாம் பானையில போட்டு கிணற்றுக்குள் போட்டு விட்டேன். ஹஹஹா… நீயும் உன் வெள்ளிக் காசுகளை கிணற்றுக்குள் போடு. எல்லாம் பத்திரமாக […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 12 | ஜெயஸ்ரீ அனந்த்

மயங்கிச் சரிந்த கெளரியை நாச்சியார் தனது மடியில் கிடத்தி, “கெளரி… கெளரி…” என்று கன்னத்தைத் தட்டி கொண்டிருந்த நேரத்தில் அரண்மனை வைத்தியர் அங்கு வந்து கெளரியின் நாடியைப் பிடித்துச் சோதித்தார். “பயம் ஏதும் இல்லை. சற்று பதட்டமாகக் காணப்படுகிறாள். அவ்வளவு தான். சிறிது ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்.” என்றார். நிம்மதிப் பெருமூச்சு விட்ட நாச்சியார், இளவரசரிடம் திரும்பி, “அத்தான் நடப்பது எதுவும் நல்லதாக தோன்றவில்லை. ஆகவே நாம் அத்தையை ஒரு முறை நேரில் சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்று […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 9 | ஜெயஸ்ரீ அனந்த்

அரசர் செல்லமுத்து முதன்மந்திரி பசுபதியுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் மெய்க்காப்பாளன் லிங்கபதி உள்ளே வந்தான். “அரசருக்கு வணக்கம். தங்களைக் காண கீழக்கரையிலிருந்து சீதக்காதி வந்துள்ளார்” என்றான். “நண்பன் சீதக்காதியா..? அவரை உடனே வரச்சொல்” என்று ஆணை பிறப்பித்து விட்டு பசுபதியிடம், “அமைச்சரே… நினைவு இருக்கட்டும்… இந்த வருடம் திருப்புல்லாணி மார்கழி உற்சவம் வெகு விமர்சையாக நடக்க வேண்டும். அதே போல் ராஜசிம்மமங்கலம் ஏரியின் உபரி நீர் தற்காலிகமாக நிறுத்தபட்டு அருகில் இருக்கும் மதகிற்குத் திருப்பி விட ஏற்பாடு […]Read More

தொடர்

பொற்கயல் | 13 | வில்லரசன்

13. தேரும் காஞ்சியும் தொண்டை மண்டலத்தின் காஞ்சி நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. நகரம் முழுவதும் உள்ள வீடுகள், மாளிகைகள், அரண்மனை போன்ற அனைத்து இடங்களிலும் தோரணங்கள் மாவிலைகள், நறுமணம் கமழும் மலர் மாலைகள், வாயிலில் மாட்டுச் சாணம் தெளித்து அழகிய பெரும் கோலங்கள் என காட்சியளிக்க மேலும் சில பெண்கள் ஈரத்தலையுடன் கோலம் போட்டபடி ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக காணப்பட்டார்கள். வீதிகள் எங்கும் இருபுறமும் பாண்டியர்களின் கயல் கொடிகளுடன் சோடர்களின் கொடிகள் பல நட்டு வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 8 | ஜெயஸ்ரீ அனந்த்

ஒரு மதிய பொழுது! பனை ஓலைக்கீற்று வேய்ந்த ஒரு வீட்டின் கூரையைத் தாண்டி புகை கசிந்து கொண்டிருந்தது. புகையின் வாசனையை வைத்தே அது கம்பங்கூழும் கருவாட்டு குழம்பும் என்று கூறிவிடலாம். தூரத்தில் இருவர் இந்தப் புகை கசியும் கூரை வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் தனது ஒரு காலைச் சற்றுச் சாய்த்துச் சாய்த்து நடப்பதைப் பார்த்தால் அது சிகப்பின் கணவன் இசக்கி என்று நமக்கு தெரியும். மற்றொருவர்..? அவரைப் பார்த்தால் கப்னி உடையும் […]Read More

தொடர்

பொற்கயல் | 12 | வில்லரசன்

12. விடைபெற்றனர் முடிந்தளவு முத்தக் கடலில் நீந்தி நனைந்து காதல் தீவில் கரை ஒதுங்கி படுத்துக் கிடந்தார்கள் மின்னவனும் பொற்கயலும். இரவு முழுவதும் துணையாக இருந்த இருள் மெல்ல மெல்ல விலகி இவர்கள் இருப்பைக் காட்டிக் கொடுக்க முயன்று கொண்டிருந்தான். அதற்கு ஏற்ப பனிப்பகையனும் வீறுகொண்டு எழுந்தவண்ணம் இருந்தான்‌. அதை உணர்ந்த மின்னவன் தன் வலக்கையைத் தலையணையாகக் கொண்டு படுத்துக்கிடக்கும் பொற்கயலிடம், “பொழுது விடிந்துவிட்டது முத்தே!” எனச் சொல்லிவிட்டு பொற்கயலின் தலையை வருடிக் கொண்டிருந்தவன் தன் விரல்களை […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 7 | ஜெயஸ்ரீ அனந்த்

இளவரசர் முத்து வடுகநாதரை சுமந்து விரைந்து வந்த குதிரை நடுநிசி இரவில் பனையூர் அருகில் வரும் பொழுது சற்று களைப்படைந்து தனது வேகத்தை குறைத்துக் கொண்டது. இளவரசரும் அதை துன்புறுத்த மனமில்லாமல் குதிரையிலிருந்து இறங்கி அதனை மெதுவாக நடத்தி கொண்டு சென்றார் . டொக்…. டொக்…. என்ற குளம்பின் ஓசையும் வண்டுகளின் ரீங்காரமும் இணைந்து தேவநாதத்தை உண்டு பண்ணி கொண்டிருந்த நடுநிசி அது. நிலவின் ஒளியில் ஆங்காங்கே உயர்ந்து வளர்ந்த பனைமரங்களும் வயல்களும் அதில் விளைந்திருந்த பயிர்களும் […]Read More

தொடர்

பொற்கயல் | 11 | வில்லரசன்

11. பொலிவிழந்த பொன்மான் வழக்கமாக அந்த நந்தவனத்தில் பொற்கயல் காத்துக்கிடப்பதையே கண்டு பழக்கப்பட்டிருந்த குளத்தின் வண்ண மீன்கள், வண்ணக் கோழிகள், ஆந்தைகள், பூக்கொடிகள் போன்றவை அங்கு வழக்கத்திற்கு மாறாக மின்னவன் வானைப் பார்த்தபடி படுத்துக் கிடப்பதைப் கண்டு ஒன்றுக்கு ஒன்று கிசுகிசுக்கத் தொடங்கின. “என்ன அதிசயமாக இருக்கிறது? இவன் எப்பொழுதும் தாமதமாக வருபவன் ஆயிற்றே! இன்று பொழுது சாய்ந்ததும் முதலாக வந்து அவளுக்காக காத்திருக்கிறான்!” “அதுதான் எனக்கும் புரியவில்லை! பொறு அவள் வரட்டும்! என்னவென்று பார்ப்போம்” என்று […]Read More