Day: May 13, 2022

சதுரங்க ராணி

முதல் பெண் ஆதீன கர்த்தர் சிவ பிருந்தாதேவியின் சாதனைகள்

வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்கிற வள்ளலாரின் வாக்கிற்கிணங்க அந்த சைவ சமயத்துக்கும் தமிழகுக்கும் தொண்டாற்றி வந்தவர் திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் முதல் பெண் ஆதீன கர்த்தர் அன்னை சாயிமாதா சிவ.பிருந்தாதேவி. மன்னராட்சி நடைபெற்ற புதக்கோட்டை சமஸ்தான பரதக் கலைஞராக விளங்கிய திருக்கோகர்ணம் சிவராம நட்டுவனார் –நல்லம்மாள் தம்பதி யின் ஏழு குழந்தைகளில் கடைசிப் பெண்ணாக 1927ல் பிறந்தவர் சிவ.பிருந்தா தேவி. முதலில் திருக்கோகர்கணம் பள்ளியிலும் பின்னர் ராணியார் பள்ளியிலும் படித்தார். இளம் மங்கைப் பருவத்தில் இயல்பாக […]Read More

கைத்தடி குட்டு

இலங்கை புதிய பிரதமர் அறிவிப்பும் அதிபர் கோத்தபய ராஜதந்திரமும்

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் மகிந்த ராஜபக்ச வின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 143 எம்.பி.க்கள் உள்ளனர். இதற்கு அடுத்து ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 எம்.பி.க்கள் உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்னின்று நடத்தி வருகிறார். பிரதமர் பதவியை ஏற்க அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் அவர் சில நிபந்தனைகளை விதித்தார். குறிப்பிட்ட கால வரம்புக்குள் கோத்தபய ராஜபக்ச […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 5 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

“வித்யாதரா, சமயோசித புத்தி நம்மைப் பெரும் சங்கடத்தில் இருந்து விடுவித்துவிடும். அந்த திறமை உனக்கு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் ஒரு கதை சொல்கிறேன் கேள். முன்னொரு காலத்தில் காட்டில் ஓர் ஆட்டுக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. அதில் ஓர் வயதான ஆடு வழி தவறி நெடுந்தொலைவு வந்து விட்டது. பொழுதும் சாய்ந்துவிட்டது. திடீரெனப் பெரும் மழையும் பிடித்துக் கொள்ளவே அந்த ஆடு ஒதுங்க இடம் தேடியது. நல்லவேளையாக அங்கே ஒரு குகை தென்பட்டது ஆடு அங்கே […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 9 | ஜெயஸ்ரீ அனந்த்

அரசர் செல்லமுத்து முதன்மந்திரி பசுபதியுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் மெய்க்காப்பாளன் லிங்கபதி உள்ளே வந்தான். “அரசருக்கு வணக்கம். தங்களைக் காண கீழக்கரையிலிருந்து சீதக்காதி வந்துள்ளார்” என்றான். “நண்பன் சீதக்காதியா..? அவரை உடனே வரச்சொல்” என்று ஆணை பிறப்பித்து விட்டு பசுபதியிடம், “அமைச்சரே… நினைவு இருக்கட்டும்… இந்த வருடம் திருப்புல்லாணி மார்கழி உற்சவம் வெகு விமர்சையாக நடக்க வேண்டும். அதே போல் ராஜசிம்மமங்கலம் ஏரியின் உபரி நீர் தற்காலிகமாக நிறுத்தபட்டு அருகில் இருக்கும் மதகிற்குத் திருப்பி விட ஏற்பாடு […]Read More

தொடர்

கால், அரை, முக்கால், முழுசு | 5 | காலச்சக்கரம் நரசிம்மா

5. பஞ்சுப் பொதிகளும், தீபச்சுடரும்… நால்வரும் கங்கணாவைப் பார்த்து திகைத்து நின்றிருந்தனர். ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பிளந்து கட்டியபடி, சிக்லெட் மென்று கொண்டு, கட்டை விரலால் யாருக்காவது டெக்ஸ்ட் செய்து கொண்டு, அல்ட்ரா மாடர்னாக ஒரு பெண்ணை எதிர்பார்த்த நால்வருக்கும் முதல் அதிர்ச்சி. கங்கணா ஆனந்த், வெள்ளை நிறத்தில் சிவப்பு பார்டருடன் கூடிய காட்டன் சேலை உடுத்தி, வங்காளப் பெண்மணி போன்று காணப்பட்டாள்! கூந்தலை பிரெஞ்சு பிலீட்ஸ் மாதிரியில் பின்னலிட்டு, பிருந்தா காரத் […]Read More