Day: May 5, 2022

ஒலியும் ஒளியும்

விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ பட பூஜை!

விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.  விஷாலின் ‘எனிமி’ படத் தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் இப்படத் தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று […]Read More

உலகம்

மனிதர்கள் வாழத் தகுதியான இன்னொரு பூமி கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழ ஏற்ற தட்பவெப்ப சீதோஷ்ண நிலை உள்ள பூமியும் அதில் ஆறு, குளங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி இன்னொரு பூமியிலும் மனிதர்கள் வசிக்கலாம். வாருங்கள் முழு செய்தியையும் பார்க்கலாம் சூரியக் குடும்பத்தில் சனிக்கிரகம் அருகே பூமியைப் போலத் தோற்றமளிக்கும் இன்னொரு பூமியை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி மேத்யூ லபோட்ரா தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. சூரியனில் இருந்து ஆறாவதாக சனிக்கோள் உள்ளது. சூரியன் – சனி இடையி லான துாரம் 147 கோடி கி.மீ. சனிக் […]Read More

கவிதைகள்

தூரிகையின் பெருமை | ஆதியோகி

தூரிகையோ, உளியோ, பேனாவோ பெரிதாய்ப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது…? பெருமைமிக்க ஒரு ஓவியனின், சிற்பியின், கவிஞனின் கைகளில் கருவியாய் இருந்ததைத் தவிர… ++++++++++++++++++++++ மகிழ்ச்சி ———– நாளை வாடப் போவது தெரிந்தும்தானா, சிரிக்கின்றன பூக்கள்…? ++++++++++++++++++++++ வார்த்தைகள் ———– ‘பூக்கள் கூறும் கவிதைகளை எல்லாம் வடித்திடும் அளவுக்கு தன்னிடம் வார்த்தைகளில்லை’ என்று புலம்புகிறது மொழி ++++++++++++++++++++++ எதிர்பார்ப்பு ———– “நமக்கென்று எதிர்பார்ப்புகளே இருக்கக் கூடாது” என்றேதான் எதிர்பார்க்கிறார்கள் எல்லோரும். ++++++++++++++++++++++ காரணம் ———– எரியும் தீ […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 8 | ஜெயஸ்ரீ அனந்த்

ஒரு மதிய பொழுது! பனை ஓலைக்கீற்று வேய்ந்த ஒரு வீட்டின் கூரையைத் தாண்டி புகை கசிந்து கொண்டிருந்தது. புகையின் வாசனையை வைத்தே அது கம்பங்கூழும் கருவாட்டு குழம்பும் என்று கூறிவிடலாம். தூரத்தில் இருவர் இந்தப் புகை கசியும் கூரை வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் தனது ஒரு காலைச் சற்றுச் சாய்த்துச் சாய்த்து நடப்பதைப் பார்த்தால் அது சிகப்பின் கணவன் இசக்கி என்று நமக்கு தெரியும். மற்றொருவர்..? அவரைப் பார்த்தால் கப்னி உடையும் […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 19 | தனுஜா ஜெயராமன்

“என்னடா இதெல்லாம்..?” என்ற அப்பாவின் நேரடியான கேள்வியில் நிலைகுலைந்து போனான் முகேஷ்.. அமைதியாகக் காரை செலுத்தினான்.“நான் சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க இருந்த ஏட்டு வேற ஒரு போலீஸ்காரரிடம் உன்னை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்” என்றார் வேதமூர்த்தி கோபத்துடன்… “என்னை மன்னிச்சிருங்கப்பா…நான் அந்த தப்பை செய்திருக்கக்கூடாது… இன்னைக்கு இது இவ்ளோ ப்ரச்சனையா ஆகும்னு கனவிலேயும் நினைக்கலைப்பா”…. “உங்கம்மாவுக்கும் சுதாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்னடா நினைப்பாங்க உன்னை பத்தி”… “ப்பா!….தயவு செய்து எதுவும் சொல்லிடாதீங்கப்பா”…என்றான் கண்களால் […]Read More