Month: February 2022

முக்கிய செய்திகள்

கண்டுபிடிப்பாளரைக் கண்டுகொள்ளாத  நாட்டில் கண்டெடுத்த   நல்முத்து சி.வி.ராமன்

ராமன் விளைவைக் கண்டுபிடித்த பிப்ரவரி 28-ம் நாளை ஒவ்வொரு ஆண் டும் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வெள்ளையரசு காலத்தில் பல அரசியல் நெருக்குதல் கண்ட சி.வி.ராமன் பற்றிய பதிவு. கடல் நீர் வெண்மை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அது நீலநிற மாக இருப்பது வான நிறமான நீலவண்ணத்தின் பிரதிபலிப்பு  என்பதும் பலருக்கும் தெரிந்தும் தெரியாமல் இருக்கும். அதாவது ஒளிச்சிதறல். ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும்போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. […]Read More

ஒன் மினிட்

‘வலிமை’ படத்தைப் பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

‘வலிமை’ பிரம்மாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ்  கார்ப்பரேஷ னால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக  மலேசிய மனிதவளத் துறை அமைச்சரும் தீவிர அஜித் ரசிகரான டத்தோ ஸ்ரீ   M.சரவணன் அவர்களும், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் சி.இ.ஓ. டத்தோ அப்துல் மாலிக் தஸ்திகர் அவர்களும் கலந்துகொண்டனர். இந்திய சிறப்பு  சூப்பர் பைக்கர்களின் சாகசங்கள், சிங்க நடனம் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் […]Read More

அண்மை செய்திகள்

‘அழகிய கண்ணே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ‘எஸ்தல் எண்டர்டெய்னர்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் ‘அழகிய கண்ணே’. இத்திரைப்படத்தை இயக் குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குநர் R.விஜயகுமார் இயக்குகிறார்.லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள்.  பல திருப்பங்கள் கொண்ட ஒரு இளைஞனின் காதல் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, இயக்குநர் ராஜ் கபூர், […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 16 | தேவிபாலா

“ என்னை பற்றி நீ என்னடா சொல்லுவே?” “கொலைகாரன்” சிதம்பரத்தின் ஒற்றை சொல், பூதத்தைத் தூக்கி ஆகாயத்தில் வீசியது! சட்டென சுதாரித்துக்கொண்ட பூதம், “ என்ன உளர்ற? நான் யாரை கொலை செஞ்சேன்? ஒரு பெரிய மனுஷனை, உனக்கு சம்பளம் தர்ற முதலாளியை, நீ டாமேஜிங்கா பேசறே! இதுக்காக உன் மேல மான நஷ்ட வழக்குத் தொடர என்னால முடியும்!” “ செய்! உன் மனைவி ராஜலஷ்மி அம்மா, விபத்துல இறந்ததா ஊரை நீ நம்ப வச்சிருக்கே! […]Read More

தொடர்

பொற்கயல் | 3 | வில்லரசன்

3. கயல் சகோதரிகள் பெரும் மீசையும், அடர்ந்த பிடரி முடிகளும், பலத்த மேனியையும் கொண்ட வாணாதரையார் காலிங்கராயர் பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக ஆட்சி செய்யும் பலரில் குலசேகர பாண்டியனுக்கும் பாண்டிய அரசுக்கும் மிக நெருங்கியவர். எந்தளவு நெருங்கியவர் என்றால் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நன்மைக்காகப் பல ஆலயங்களை எழுப்பி மன்னனது மனதில் சிறப்பிடத்தைப் பிடித்து வைத்திருப்பவர். அப்படிப் பாண்டிய நாட்டில் பெரும் செல்வாக்கினைக் கொண்ட காலிங்கராயர் அந்த இரவுப் பொழுதில் களங்கனது ஒளியின் […]Read More

கைத்தடி குட்டு

கவுன்சிலர்களுக்கு உற்சாக மது விருந்து

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் வருகிற 2ஆம் தேதி (2-2-2022) பதவியேற்கிறார்கள். அதன்பிறகு 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.இந்தப் பதவியை கைப்பற்ற பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக சில ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள்.  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. […]Read More

நகரில் இன்று

வலிமை ரிலீஸ் அப்டேட்

அஜித்தின் படம் எதுவும் 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அஜித் ரசிகர்கள் இந்தப் படத்தை எதிர்பார்த்து சமூக வலைதளங்களில் பல பதிவுகளை வெளியிட்டனர். அதனால் வலிமை அப்டேட் என்ற ஹாஸ்டெக் ட்ரெண்ட் ஆனது. ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களின் முதல் நாள் வசூலை வலிமை திரைப்படம் முதல் நாளே அடித்து நொறுக்கி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நடிகர் அஜித் மீண்டும் […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார பீரங்கி தா.பா. நினைவுகூரத்தக்கவர்

மனதில்பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பேசும் மிகச் சில அரசியல் தலைவர் களில் முக்கியமானவர் தா.பாண்டியன். தமிழ்நாடு, தமிழ்மொழி, ஈழத் தமிழர் வாழ்வுரிமை உள்ளிட்டவற்றுக்காக எப்போதும் குரல் கொடுத்துவந்தவர் தா.பாண் டியன். தந்தை பெரியார்மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், சமூகநீதி, சாதிய வன்கொடுமை எதிர்ப்பு ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுக்கத் தவறியதில்லை. `ஜனசக்தி’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் கடைசிப் பக்கத் தில் `சவுக்கடி’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தின. சட்டமன்றத் தேர்தலில் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 16 | சாய்ரேணு

15. படுக்கை கீழ்ப் பர்த்தில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் இராணி கந்தசாமியின் முகம் அமைதியாக, தெளிவாக இருந்தது. அவள் நெஞ்சில் தெரிந்த செந்நிற ஓட்டையை விட்டுவிட்டால், அவள் நிம்மதியாகத் தூங்குவது போலவே தோன்றும். “டேம் யூ, இடியட்ஸ்” என்றாள் ஸ்ரீஜா, தன்யாவும் தர்ஷினியும் உள்ளே நுழைந்ததும். குனிந்து இராணி கந்தசாமியின் உடல்மீது பார்வையைப் போட்டிருந்த தன்யா “வாட் டு யூ மீன்?” என்றாள் அமைதியாக. “உங்களைத்தான் சொன்னேன். நியாயமா பார்த்தா நான் என்னைச் சொல்லிட்டிருக்கணும்! உங்களை நம்பி இவ்வளவு […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 44 | காலச்சக்கரம் நரசிம்மா

44. தரையில் இறங்காத விமானம் தனது குடும்பத்தினர் மற்றும் அமீர், அபியுடன், குகன்மணி செலுத்திய விமானம், விண்ணில் உயர்ந்து பறந்து சிறு புள்ளியாகி மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள், மயூரி..! குகன்மணியை எவ்வளவு நம்பினாள்..? இதயத்தையே பறிகொடுக்கும் அளவுக்கு அல்லவா அவனையே சார்ந்து நின்றாள்..! இப்படிக் கழுத்தை அறுத்து விட்டானே..! வேதனையுடன் நடந்தவளை ஒரு குரல் தடுத்து நிறுத்தியது. “தண்டனை நிறைவேற்றப்பட்டது..!” –தனக்குப் பரிச்சயமான குரலைக் கேட்டு, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மயூரி..! சஷ்டி சாமிதான் சிரித்தபடி […]Read More