Day: January 30, 2022

கைத்தடி குட்டு

விழுந்தும் மரத்திலேயே ஏறி ஒட்டிக்கொள்ளும் ஏரழிஞ்சில் மர விதை பற்றித் தெரியுமா?

தாவரங்கள் தந்த வரம் தாவரம் என்றார் ஒரு கவிஞர். அந்தத் தாவரங்கள் உயிர்ப் புடன் இருந்தால்தான் மனித உயிர்கள் ஜீவித்திருக்க முடியும். அதை அழித்தால் மனித உயிர்களும் மண்ணில் உயிர்பெற முடியாது என்பது கண்கூடு. தாவரங்கள் மனிதனின் சுவாசக் காற்றாய் வாழ்கிறது, பசியைப் போக்குகிறது, பிணியை நீக்குகிறது, தெய்வீக அருள் வழங்குவதற்குத் துணையாக இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தாவரங்களில் அதிசய மூலிகைச் செடி, கொடி மரங்கள் உள்ளன. குறிப்பாகக் காற்றில் உயிர்வாழ்ந்து வளரக்கூடிய தாவரம் […]Read More

கைத்தடி குட்டு

பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கிளாரினெட் கலைஞர் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி.நடராஜன் தனது 90-வது வயதில் மத்திய அரசின் 2022ஆம் ஆண்டுக்கான  பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 73வது குடியரசு தின விழாவில் ஜனாதிபதி இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார். கிளாரிநெட் இசையில் வல்லவரான இவர் நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையிடமும்,  காருகுறிச்சி அருணாசலம் அவர்களிடமும், இசை யைக் கற்றுத் தேர்ந்தவர். இவருடைய தந்தை இவர் சிறு வயதில் இருக்கும்போது,  ஒரு ஆங்கிலோ […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 19| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாக தோஷம் நீங்க போகர் பிரான் கூறிய பரிகாரத்தை காண்போம்.’நாக சதுர்த்தி திதி’ அன்று,ஒரு அரச மரத்திற்கு அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன்மேல் சிவலிங்கம் ஏந்திய நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம். பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும்,நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார். […]Read More

தொடர்

பேய் ரெஸ்டாரெண்ட் – 24 | முகில் தினகரன்

“என் இனிய ஆவி நண்பரே…என்ன விஷயம்?…ஏன் இந்தப் பரபரப்பு?…” கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த குணாவின் உதடுகள் கேட்டன. அந்தக் கேள்விக்கான பதிலை வெள்ளைத் தாளில் எழுதித் தள்ளியது லட்சுமி நரசிம்மன் ஆவி. “அன்பரே!…தங்களுக்குப் பொருத்தமானதொரு ஜோடியைக் கண்டுபிடித்து விட்டேன்!…அவளும் தங்களைப் போலவே நல்ல தோழி!…பல தரகர்கள் அவளுக்கு வரன் தேடித் தேடி ஓய்ந்து போய் “இனி முடியாது” என்று ஒதுக்கி விட்டதால் ஆற்ற மாட்டாத சோகத்துடன் “இனி நமக்கு திருமணம் என்பது இந்த ஜென்மத்தில் இல்லை” […]Read More

தொடர்

வாகினி – 33| மோ. ரவிந்தர்

அன்று கஸ்தூரி விஷம் குடித்து இறந்து விட்டாள் என்று ஊரே அவள் வீட்டுக்குள் படை எடுத்து நிற்க. ஆவடி இன்ஸ்பெக்டர் வானதி தலைமையில் எண்ணற்ற காவலர்களுடன் வீட்டுக்குள் இன்வெஸ்டிகேஷன் நடந்து கொண்டிருந்தது. மக்கள், ஆங்கங்கே நின்று, கூடிப் பேசிக் கொண்டிருப்பதும் காட்சியாக அமைந்தது. அடுத்தடுத்து இந்தப் பகுதியில் இப்படி ஒரு இறப்பு, இழவு என்றால் அவர்களுடைய மனநிலையும் எப்படிதான் இருக்கும்?’ தடம் புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் போல்’ மனம் புரண்டு தானே ஓடும். அவரவர்களுக்குத் தெரிந்த, […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 30.01.2022

தை – 17 | ஞாயிற்றுக்கிழமை ராசி- பலன்கள் 🔯மேஷம் -ராசி: 🐐 வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உண்டாகும். நன்மையான நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு. 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️அஸ்வினி : ஒத்துழைப்பு ஏற்படும். […]Read More

சிறுகதை

மனக்காடு | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 3 பேன்டஸி ஸ்டுடியோ கிருஷாங் மெல்லிய டெஸிபல்லில் சீழ்க்கையடித்தான். அவனுக்கு வயது 30. ஆறடி உயரன். வகிடு இல்லாத முரட்டுகேசம். முட்டைக்கண்கள். நாவல்நிற உதடுகள். இந்தியாவின் நம்பர் ஒன் புகைப்படக்கலைஞன். எதனை பார்த்தாலும் யாரை பார்த்தாலும் புகைப்பட கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பான். அவனது மேஜையில் கீழ்க்கண்ட டிஜிட்டல் கேமிராக்கள் ஓய்வெடுத்தன. நிகான் டி3-500 ஒலிம்பஸ் ஒஎம்-டிஈ-எம்10 மார்க் IV ப்யூஜி பிலிம் எக்ஸ் –டி200 கேனான் ஈஒஎஸ்-90டி பேனஸோனிக் லூமிக்ஸ் ஜி100 ஸோனி […]Read More