Day: January 29, 2022

கைத்தடி குட்டு

ஜனவரி 30 தியாகிகள் தினம் ஏன்?

இந்தியாவின் சுதந்திரத்துக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பாடு பட்ட மகாத்மா, சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது இதுகாலம் வரைக்கும் மாறாத வருத்தம். 64 ஆண்டுகளுக்குமுன் இன்றைய நாளில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவின் துக்க நாளாக அமைந்தது. உலகம் முழுவதிலும் பெரிய தலைவர்கள் கொல்லப்பட்ட வரலாறு உண்டு. ஆனால் அறவழியில் போராட்டியவரையே ஒருவன் வன்முறையில் கொன்றது இந்திய வரலாற்றில் தீராப் பழியை ஏற்படுத்தியது. 1948, ஜனவரி 30ஆம் தேதி உலகத்தைத் திடுக்கிடச் செய்த ஒரு […]Read More

கைத்தடி குட்டு

யாருடைய கட்டுபாட்டிலும் இல்லா வடசென்னை மெட்ரொ திட்டம்

2012 -2022 திட்டமோ திட்டம் இன்னும் தொடரும். யாரும் கண்டுகொள்ளாத ஒரே திட்டம் வடசென்னை மெட்ரொ இரயில் திட்டம்… முடிவடையா நீண்ட நெடிய இத்திட்டத்தை பற்றிய முடிவுரை தெரிய வேண்டும் என்றால் சாமானிய பொது மக்கள் கோயம்பேடு அதிகார மையத்தை அனுகி முடித்து கொள்ளளாம் என்று பகுதி அதிகாரிகள் பதில். மேலும் புதிய கான்ராக்டர் தற்போது இன்னும் சில நாட்களில் தான் பணி மேற்கொள்ள போகிறார்கள். தண்டையார்பேட்டை மெட்ரோ பணி தற்போதுக்கு முடியாது… சாலையும் கிடையாது… பொதுமக்கள் […]Read More

ஸ்சீக்ரெட்ஸ்

பொன்னியின் செல்வன் அப்டேட்ஸ்

தமிழ் சினிமாவில் இன்டஸ்ட்ரியே கூர்ந்து கவனிக்கும் இயக்குநர் மணி ரத்னம். அவரின் கனவுத் திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய ஐந்து பாகங்கள் கொண்ட நாவலைச் சுருக்கி இரண்டு பாகங்களாக மணிரத்னம் படமாக எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஜெயராம், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, த்ரிஷா என ஏகப் பட்ட பிரபல நடிகர்களும் நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 75 சதவிகிதப் படப்பிடிப்பு […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 11 | தனுஜா ஜெயராமன்

“சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சி” என்று கொட்டை எழுத்தில் பித்தளை போர்டு தொங்கிய கேட்டில் காரை உள்ளே நுழைத்து பார்க் செய்தான் முகேஷ். அங்கே ஏற்கனவே வந்து காத்திருந்த ஹரிஷ், பிடித்து கொண்டிருந்த சிகரெட்டை தூர எறிந்துவிட்டு …”ஏன்டா இவ்ளோ நேரம்” என்றான். “கொஞ்சம் நேரமாகிடுச்சி…ஆமா பேசிட்டியா அவர்கிட்ட?…ஒண்ணும் ப்ரச்சனை ஆகாதே”… “நைட்டே போன் பண்ணி பேசிட்டேன்… வா மச்சி போகலாம்”.. இருவரும் ரிசப்ஷனில் சென்று பெயரை சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்து காத்திருந்தனர்… இன்டர்காமை கைகளால் பொத்தியபடி ரிசப்ஷனில் […]Read More

தொடர்

சிவமலர் – மொட்டு – 2 | பஞ்சமுகி

“ஐ அம் சிவமலர்…” காதுவரை நீண்ட கயல்விழிகள், கூரான நாசி, செப்பு உதடுகள் எடுப்பான மோவாய். மேலுதட்டில் இடது ஓரமாய் குறு மிளகாய் ஒரு மச்சம். பிறை நெற்றியில் அலைந்த கேசத்தை ஒரு கையால் ஒதுக்கியபடியே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளை இமைக்காது பார்த்தான் குமார். ஆளை அசரடிக்கிற அழகு இல்லை. அதற்கும் மேலே ஏதோ ஒன்று அவள் முகத்தை விட்டு அவன் கண்களை நகர முடியாமல் கட்டிப் போட்டது. “பார்த்த முதல் நாளே…” ட்யூனை மெல்லியதாய் சீழ்க்கையடித்தபடி […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 40 | காலச்சக்கரம் நரசிம்மா

40. உயரே உயரே… என் உயிரே உயிரே..! மலைச்சரிவில் இருந்த போகர் பள்ளியினுள் நுழையும் வரையில், மயூரி தனது கண்களைத் திறக்கவில்லை. மறந்து போய்க் கீழே நோக்கினால், அச்சத்தினாலேயே தான் தொற்றிக்கொண்டிருக்கும் குகன்மணியின் தோளில் இருந்து நழுவி விடுவோம் என்கிற எண்ணத்தில், அவனது தோளில் புதைந்திருந்த தனது முகத்தை அவள் உயர்த்தவேயில்லை. அவன் பத்திரமாக தன்னைக் கொண்டு சேர்ப்பான் என்கிற நம்பிக்கையுடன், தான் வழிபடும் முருகன் தன்னைக் கைவிட மாட்டான் என்று உறுதியாக நம்பினாள். மலைச்சரிவில் அந்த […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 29.01.2022

29- 01- 2022 சனிக்கிழமை – தை 16 ராசி – பலன்கள் 🔯மேஷம் – ராசி: 🐐 எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு பயணம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். இன்பமான நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு. 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் […]Read More