Day: January 26, 2022

கைத்தடி குட்டு

ஆண்மைக்குறைவு ஒரு நோயா?

காலையிலிருந்து  நடு இரவு வரை அத்தனை சேனல்களிலும்  பத்திரிகைகளிலும் சிக்கிச் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆண்மைக்குறைவு. “ஆண்மைக்குறைவா, கவலை வேண்டாம். எங்களிடம் நல்ல தீர்வு இருக்கிறது” என்று ஒரு விளம்பரம். “செக்ஸ் பிரச்சினையா? வேகமில்லையா? தளர்ச்சியா? எங்களிடம் வாருங்கள். உடனே தீர்வு.” என்கிறது இன்னொரு விளம்பரம். “சொப்பன ஸ்கலிதமா? துரித ஸ்கலிதமா? அந்தரங்கப் பிரச்சினையா?” எங்கள் மூலிகை மருந்தின் மூலம் தீர்த்து வைக்கிறோம்” என்றும், கூவிக் கூவி அழைக் கிறார்கள் இளைஞர்களை. ஜிங்கா கோல்ட் ஒண்ணு போதும் நின்னு […]Read More

தொடர்

சிவமலர் – மொட்டு – 1 | பஞ்சமுகி

“பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!” அந்த அதிகாலையில் ஓதுவார் சம்பந்தனின் குரல் கணீரென ஒலிக்க கூடவே ஆலய மணியின் ஓசையும் இணைந்து சூழலை தெய்வீக மணம் கமழ வைத்துக் கொண்டிருந்தது. 85 வயதான நீலகண்ட குருக்கள் கோவிலின் வலது பக்கத்திலிருந்த தீர்த்தத்திலிருந்து முகர்ந்து வந்த நீரால் அபிஷேகம் செய்து சற்றே பழுத்துப் போயிருந்த அந்த […]Read More

சிறுகதை

லைஃப் பார்ட்னர் | இயக்குனர் மணிபாரதி

அன்புள்ள அப்பாவிற்கு, உங்கள் மகள் வினோதினி எழுதிக்கொண்டது. நீங்களும், அம்மாவும் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் நன்றாக இல்லை. உங்கள் பேச்சையும், அம்மா சொன்னதையும் கேட்காதது, எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை இப்போது உணர்கிறேன். லிவிங் டூ கெதர் என்கிற பெயரில், கார்த்திக்குடன் சேர்ந்து வாழ, முடிவெடுத்திருக்கக் கூடாது. அவசரப்பட்டு விட்டேன். அவன், அவனது பசியை தீர்த்துக் கொண்டானே ஒழிய, ஒருநாளும் என்னிடம் அன்பாக நடந்து கொள்ள வில்லை. அத்தனையும் கண் துடைப்பு. வெளிவேஷம். […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 12 | சாய்ரேணு

11.கவிகை வெளியே மழை குறைந்திருந்தது. ஆனாலும் அது தற்காலிகம்தான் என்று உணர்த்துவதுபோல, மேகங்கள் வானம் முழுக்கக் குடை கவித்திருந்தன. தன் கூப்பேக்குப் போயிருந்த ஸ்ரீஜா இப்போது மீண்டும் டைனிங் காருக்குள் நுழைந்தாள். முகம் கழுவி, கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தாள். “என்ன, எப்படிப் போயிட்டிருக்கு?” என்று கேட்டாள். “பார்க்கலாம், இப்பதானே ஆரம்பிச்சிருக்கு” என்றாள் தன்யா. “இப்போ அடுத்து என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டாள் ஸ்ரீஜா. “ஒரு நூலைப் பிடிச்சுக்கிட்டு அது எங்கெல்லாம் போகிறதோ அங்கெல்லாம் போனா, சிக்கல் […]Read More