Month: December 2021

கைத்தடி குட்டு

எழுத்தாளர் அம்பைக்கு சாகித்திய அகாதெமி விருது

24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத் தாக்கங்களுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர்கள் மத்தியில் சாகித்ய அகாடமி விருது உயரிய விருதாக காணப்படுகிறது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது 77 வயதாகும் எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1955-ம் ஆண்டிலிருந்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுவரும் நிலையில், இதுவரை யிலான விருதாளர்களில், ராஜம் கிருஷ்ணன் (1973), லட்சுமி திரிபுரசுந்தரி (1984), திலகவதி (2005) ஆகியோரைத் தொடர்ந்து, […]Read More

கைத்தடி குட்டு

“ரைட்டர்” திரை விமர்சனம்

ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனி மெயின் ரோலில் நடித்துள்ளார். ஹரி, இனியா, மகேஸ்வரி, கவிதா பாரதி, போஸ் வெங்கட், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ’96’ படப் புகழ் இசையமைப் பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். காவல்துறையில் புரையோடி இருக்கும் அதிகாரப் போக்கு மற்றும் சாதிய பாகுபாடுகள் குறித்து விரிவாகப் பேசியுள்ளது ரைட்டர் திரைப்படம். முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு சிக்கலான வழக்கில் சிக்கிய மூத்த காவலராக சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். ரைட்டர் திரைப்படம் […]Read More

கைத்தடி குட்டு

படத்துக்கு டைட்டில் கிடைக்காததால் வைத்தார்களோ?

DBK இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பி.லிட் கம்பெனி சார்பில் டில்லிபாபு.K அவர்கள் தயாரிக்கும் படம் “டைட்டில்”. படத்துக்கு டைட்டில் கிடைக்காதததால் இந்தப் படத்துக்கு பேரே டைட்டில் என்று வைத்தார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் கதையின் கருத்து சிறப்பாக இருக்கிறது. மண்ணைக் காக்க சிறப்பான ஒரு கதையைத் தயார் செய்து எடுத்திருக்கிறார்கள் அதற்காகப் பாராட்டுவோம். விவசாய நிலங்களை NRI மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, விவசாயிகளுக்கு ஆசைகாட்டி விவசாயிகளிடமிருந்து எந்த இடைஞ்சலும், பிரச்சனைகளும் இல்லா மல் நிலங்களை வாங்கிக் கொடுக்கும் […]Read More

கைத்தடி குட்டு

தண்டாலில் உலக சாதனை

தமிழ்நாட்டை தலைமைச் செயலகமாகக் கொண்டு 26 நாடுகளில் கிளைகளைப் பரப்பிச்  செயற்பட்டு வரும் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தில் ஒரே நாளில் ஒரே மேடையில் 3 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்கள் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் தமிழர்கள். தற்காப்புக் கலை பயிலும் மாணவிகளான உதயராஜா துவாரகா ஒரு நிமிஷத்தில் 130 ‘நீ ஸ்ட்ரைக் (Knee strikes) செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்தார். அதேவேளை, யோகநாதன் துசிதா என்ற மாணவி ஒரு நிமிடத்தில் இரு […]Read More

கைத்தடி குட்டு

கல்வியும் சமூகப் பணியும் இரு கண்கள்

அறிவுக் கண்ணைத் திறக்கும் ஆசிரியர் பணி அரும்பணி. அந்தப் பணியைத் திறம்பட செய்து தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற வர்தான் வசந்தா சித்திரவேலு. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத் துள்ள தோப்புத் துறையைச் சேர்ந்தவர் வசந்தா. இவர் அண்டர்காடு பகுதியல் உள்ள சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரிய ராக 29 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவரின் சேவையைப் பாராட்டி வீரமங்கை வேலுநாச்சியார் விருது, செங்கோல் விருது, அப்துல் கலாம் விருது […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 8 | சாய்ரேணு

8. தூக்குக் கூஜா ப்ரிஜேஷும் அவர்களைப் பார்த்துவிட்டான். பார்த்தான் என்பதைவிட, அவனுடைய கண்கள் அவர்கள் மீது படிந்து விலகின என்று சொல்வதே நிஜம். அவனுக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை. யாரையும் அடையாளம் தெரிந்துகொள்ளும் மனநிலையிலும் அவன் இல்லை. கையில் சிறிய பக்கெட் போல் ஏதோ இருந்தது. அதை மட்டும் இறுகப் பிடித்திருந்தான். தர்ஷினி அவனை விடுவதாக இல்லை. வேகமாக நடந்து அவனுக்கு நேரே சென்று நின்றுகொண்டாள். “ப்ரிஜேஷ்! இங்கே என்ன பண்றீங்க? எப்போ ட்ரெயின்லேர்ந்து இறங்கினீங்க? ஸ்ரீஜாவைப் […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 9 | தேவிபாலா

பாரதி, அருளிடம் சிரித்தபடி பேசிக்கொண்டிருக்க, வெளியே பலமாக மழை பெய்து கொண்டிருக்க, அவசரமாக உள்ளே புகுந்த நாலு ஆட்கள், படக்கென ஷட்டரை இழுத்து, கடையை மூடினார்கள்..! அருள் விசுக்கென நிமிர்ந்தான்..! “யாருடா நீங்க..?” “டேய்..! அவளைப் போட்டு தள்ளிட்டு, வந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்புங்கடா..!” ஒருவன் சொன்னது தான் தாமதம், அடுத்தவன் ஒரு நீண்ட ஆயுதத்துடன் பாரதியை நோக்கிப் பாய, அடுத்த நொடியே அவன் கை ஆயுதம் தெறித்து அவனும் அலறியபடி தூரப்போய் விழுந்தான். கையில் […]Read More

கைத்தடி குட்டு

மருத்துவ சேவையில் சாதித்த செவிலியர் மணிமேகலை

இந்தியா முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வுசெய்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கி வருகிறது மத்திய அரசின் சுகாதாரத்துறை. அதன்படி 2020-ம் ஆண்டுக்கான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது கடந்த மாதம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறந்த செவிலியர் விருதை ஜி.மணிமேகலைக்கு ஆன்லைன் வழியாக வழங்கினார். இந்திய அளவில் 51 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் தமிழ்நாடு அளவில் மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. அவர்களில் மணிமேகலை செவிலியராக 17 ஆண்டுகள் […]Read More

கைத்தடி குட்டு

குத்துச் சண்டையில் (MMA) சாதிக்கும் தமிழன் பாலி சதீஷ்வர்

உலகப் புகழ்பெற்ற நடிகர் மறைந்த புருஸ்லி. இவர் நடிகர் மட்டுமல்ல, ஒரு தற்காப்புக் கலைஞரும்கூட. புரூஸ்லி நடித்த படங்கள் உலக அரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதனால் மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் ஹாலிவுட் படங்களே புரூஸ்லி படங்கள் அளவுக்கு வசூல் குவிக்க முடியாமல் மிரட்டன. அப்படிப்பட்ட புரூஸ்லி சாதனை முயற்சியாக ஒரு நொடியில் 9 குத்துகள்விட்டு  (Punches- இரண்டு கைகளையும் புஷ்டி பிடித்து மாறி மாறி குத்துவது) உலக சாதனையை 1977ல் நிகழ்த்தியிருந்தார். அந்த உலக […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 17| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- சித்தர் என்ற வார்த்தையின் பொருள் ‘விஞ்ஞானி’ ஆகும்‌.சித்தர்களை மக்கள் ஜாலங்கள் செய்யும் மாயாவிகளாகவே பார்க்கின்றனர்‌.சித்தர்கள் மக்களோடு மக்களாக ஸ்தூல தேகத்தோடு வாழும் காலத்தில்,போராசை கொண்ட மனிதர்கள் பலர் சித்தர்களை தங்களின் வறுமையை போக்கவும் மற்றும் தங்களின் நோயை குணப்படுத்தவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர்.அதில் தவறும் இல்லை.ஆனால்,யாரும் இந்த மாய வாழ்க்கையை வென்று முக்தி அடையும் நோக்கத்தோடு சித்தர்களை அணுகவில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.எனவே,சித்தர்கள் தனிமையை நாடி கானகங்களையும் மலைகளையும் தஞ்சம் புகுந்தனர்.சித்தர்களில் ‘போகர்’ […]Read More