ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும்

ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செய லாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை தென்ஆப்பிரிக்கா உட்பட 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டவர் களைவிட தடுப்பூசி போடாதவர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்தப் புதிய வைரஸ் […]

அவ(ள்)தாரம் | 5 | தேவிபாலா

அப்பா சிதம்பரம், கொஞ்சம் சோர்வுடன் இருந்தார்! அம்மா கௌசல்யா அதைக் கவனித்தாள்! பொதுவாக கண்டிப்பும் கறாரும் இருந்தாலும், குடும்பம் என்று வந்தால் உருகும் மனிதர் சிதம்பரம்..! இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் சுயநலவாதியும் கூட. தன் மனைவி, மூன்று மகள்களை தவிர அவருக்கு எந்தச் சிந்தனையும் இல்லை! அவர்கள் நன்றாக இருந்தால் போதும்! தன் உடன்பிறப்புகள், மனைவியின் உறவுகள் என யாரையும் மதிக்க மாட்டார்..! யார் வீட்டு விசேஷங்களுக்கும் போகவும் மாட்டார்..! “இது சரியில்லீங்க..! நமக்கும் நாலு மனுஷங்க […]

தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும்! -காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை

 “இளவயதிலேயே சிலம்பம் போன்ற கலைகளைக் கற்றுக்கொள்வது, பிற்காலத் தில் நம்வாழ்க்கைக்கு கைகொடுக்கும். சிலம்பாட்ட வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவிகித ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது. இது இன்னும் சிலம்பாட்டக் கலைக்கு ஊக்கமளிப்ப தாக உள்ளது” என்றார் மு.ராஜேந்திரன், ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின்  திருவண்ணாமலை  மாவட்ட அளவிலான சிலம்பாட் டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி கலையரங்கில் 29-11-21 அன்று நடைபெற்றது.         திருவண்ணாமலை முன்னாள் […]

ரஜினி மகள் சௌந்தர்யா வலைதளம் ஹூட்டில் வெதர்மேன்

தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா இணைந்து சமீபத்தில் தொடங்கிய சமூக வலைதளமான ஹூட், சக்திவாய்ந்த குரல்களின் சமூகமாய் மாறியுள்ளது. அதில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இணைந்துள்ளார். பிரதீப் ஜானை வரவேற்று சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV கூறியதாவது, “தமிழகத்தின் வானிலையைத் துல்லியமாகக் கணித்தல், பொது அக்கறை யோடு மக்களுக்குச் சரியான நேரத்தில் வானிலை தகவல்களை வழங்கி எச்சரித்தல் […]

கலைவாணர் ஒரு சகாப்தம்

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் மணிமகுடமாகத் திகழ்பவர் என்.எஸ்.கிருஷ்ணன் அன்னாரது பிறந்தநாள் இன்று (நவம்பர் 29, 1908). ரசிகர்களைச் சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங் களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். […]

அஷ்ட நாகன் – 14| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- திருநாகேஸ்வரம், கீழ்பெரும் பள்ளம்,திருப்பாம்புரம், நாக ராஜா கோயில் மற்றும் சங்கரன் கோவில் என்று நாகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போற்றும் வகையில் பல கோயில்கள் நம் தமிழகத்தில் இருந்தாலும் இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நயினார் தீவில் உள்ள “நாக பூசணி அம்மன் கோயில்” நாகர்களுக்கான அதி சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது.இந்த கோயில் எவ்வளவு பழமையானது என்று யாராலும் வரையறுத்து சரியாக கூற முடியவில்லை.ஆனால், இக்கோயில் நாகர்களுக்கான மிக முக்கியமான கோயிலாக கருதி வழிபட்டு வரப்படுகிறது. […]

பேய் ரெஸ்டாரெண்ட் – 19 | முகில் தினகரன்

மரத்தின் பின்னே ஒளிந்திருந்த திருமுருகன் சுறுசுறுப்பானான். அவன் எச்சரிக்கை அணுக்கள் ஒவர் டைம் வேலை செய்தன. “என்னது…வர்ற உருவம் ரொம்பக் குள்ளமா இருக்கு?…” அந்த உருவம் அருகில் வர…வர…திருமுருகன் தன் பார்வையைக் கூராக்கிப் பார்த்தான். “அட…இவன் சிவா கூட ஈவெண்ட் பண்ற குள்ள குணாவாச்சே?…இவன் எதுக்கு இந்த நேரத்துல இங்க உலாத்தறான்?” அப்போதுதான் திருமுருகனின் மூளைக்குள் ஒரு ஃப்ளாஷ் அடித்தது. “ஒரு வேளை இவன்தான் துர்ஆவி தங்கியிருக்கும் விடுதியோ?” அவன் ஒளிந்திருக்கும் மரத்தை அந்த குள்ள குணா […]

வாகினி – 28| மோ. ரவிந்தர்

ஒன்றிரண்டு மேகக் கூட்டத்துக்கு இடையில் வானம் வெள்ளை நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க, மேற்கு திசையிலிருந்து வெண் கதிரவன் தன் திருமுகத்தை மெல்ல பிரதிபலிக்கத் தொடங்கிக் கொண்டிருந்தான். இரைதேடும் பறவையினங்கள் ரீங்கார இசையோடு அங்குமிங்குமாக வானில் பறந்து கொண்டிருந்தது. காலை வேளை என்பதால், மக்கள் விழித்திரைகள் ஒவ்வொன்றாக மெல்ல விழிக்கத் தொடங்கியது. வேளையோடு எழுந்த குடும்பத்தலைவிகள் தங்களது வீட்டு வாசலை துடைத்துச் சுத்தம் செய்து, சாணத்தைத் தெளித்து, கோலமிட்டு அங்கங்கே காட்சியளித்தனர். ஏதோ ஒரு திசையில் சேவல் கூவும் […]

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 4 | தனுஜா ஜெயராமன்

திருச்சியின் பிள்ளையார் கோவில் தெரு. “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே” என பக்திப் பாடல் ஒலிக்க, ஊதுபத்தி வாசனையும் சாம்பிராணி வாசனையும் காற்றில் மிதந்துவர, கற்பூரத்தை பயபக்தியுடன் சாமி படங்களுக்குக் காட்டி கொண்டிருந்தாள் தனலட்சுமி. காலை நேரப் பரபரப்புடன் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்த வேதமூர்த்தி, “என்ன தனா… உன் பிள்ளை எழுந்தானா இல்லையா..? காலேஜ் போகலையா..?” என்றார் நக்கலுடன். “அவனை வம்புக்கிழுக்காட்டா உங்களுக்குத் தூக்கம் வராதே!.. இன்னைக்கு சனிக்கிழமை. கிரிக்கெட் கோச்சிங் போயிட்டு வந்து […]

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 11 | இந்துமதி

தொலைபேசியைப் பார்த்ததும் கை குறுகுறுத்தது சித்ராவிற்கு. யாருடனாவது பேசு பேசு என்றது. வழக்கமாக இருந்தால் ஷைலஜாவிற்கு போன் பண்ணியிருப்பாள், இருவரும் மணிக்கணக்கில் அறுத்திருப்பார்கள். மகாபலிபுரம் போய் வந்ததிலிருந்து இருவருமே அதிகம் பேசுவது குறைந்து போயிற்று. கலகலப்பாகப் பழகினது நின்று போயிற்று. இணை பிரியாமல் இருந்தது விலகிப் போயிற்று. கல்லூரியில் பார்த்தால்கூட ‘ஹாய்’ சொல்லிப் பிரிந்தார்கள். பேசப் பிடிக்காமல் நகர்ந்தார்கள். அவர்களது வகுப்பிலிருந்த அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டார்கள். என்ன விஷயம் என்பதைத் தெரிந்து கொள்கிற ஆர்வத்தில் நுழைந்து பார்க்க […]