ஒடிசாவில் மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்த 35 வயதான விவசாயி ஒருவர் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி ஒரு நீரேற்ற பாசன முறையை உருவாக்கியுள்ளார். இந்த முறைக்கு மின்சாரமே தேவையில்லை என்பது தான் இதன் சிறப்பம்சமாகும். சுக்ருலி தொகுதிக்கு உட்பட்ட பாதம்தாலியா கிராமத்தைச் சேர்ந்த மஹூர் திப்ரியாவுக்கு இதை உருவாக்க தேவைப்பட்டவை மூங்கில், குப்பையில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் மட்டுமேயாகும். 12’ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள, அவரது தொழில்நுட்ப புத்தி கூர்மை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. […]Read More
இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது. பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம் முடிந்து மற்றுமொரு பகல் புதிதாய்ப் பிறப்பதற்கு இந்த மோனநிலை நமக்குத் தேவைப்படுகிறது. நல்ல தூக்கம் இல்லாதபோது உடலும் மனமும் சீர்கெட்டுவிடுகின்றன. இதைக் கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் தெரிய வேண்டாம். மூதாதையரின் பாரம்பரிய அறிவே போதும். […]Read More
கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்… அவமானம் ஒரு மூலதனம்..!!*செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் […]Read More
விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா 1949ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிறந்தார். இவர் 1970ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாகப் பணியேற்றார். ஒரு விண்வெளி வீரராக அவருடைய பயணம் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தொடங்கியது. இதன் விளைவாக ராகேஷ், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சரித்திரத்தின் சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தார். பிறகு சுமார் […]Read More
மேஷம் : தொழில் சம்பந்தமான முக்கிய மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான சூழல் ஏற்படும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.பரணி : முன்னேற்றமான நாள்.கிருத்திகை : சிந்தித்து செயல்படவும். ரிஷபம் : தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். […]Read More