அற்புதமான சில வழிகள்!!!

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க அற்புதமான சில வழிகள்  !!!!   மூக்கிற்கு மேலே சிலருக்கு சொரசொரப்பாகவும், கருமையான புள்ளிகளாகவும் இருக்கும். அதிலும் மூக்கிற்கு பக்கவாட்டில் அத்தகைய கரும்புள்ளிகளால், அவ்விடமே கருமையாகவும், அசிங்கமாகவும் காணப்படும்.    இத்தகைய கரும்புள்ளிகள் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளால் வரக்கூடியது. இதற்கு அவ்வப்போது முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவதோடு, முகத்தை ஸ்கரப் செய்யவும் வேண்டும்.    அதற்கு கடைகளில் விற்கப்படும் ஸ்கரப்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வீட்டுச் சமையலறையில் […]

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது..!!!

    ஆபரணத் தங்கத்தின் விலை:       ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வகையில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.584 உயா்ந்து, ரூ.32,408-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்தை தாண்டியது.     அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயா்ந்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. போா் பதற்றம் […]

உள்நாட்டு விவகாரங்களில் அந்நியா்களின் தலையீட்டை அனுமதிக்க முடியாது:

குடியரசு துணைத் தலைவா்:     இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய நாடுகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.    கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு வெள்ளிக்கிழமை காலை தனி விமானம் மூலம் வந்த வெங்கய்ய நாயுடு, முன்னதாக கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளிடையே உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:    கற்றல் என்பது ஒரு தொடா் […]

ஜம்மு-காஷ்மீரில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.     இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.     இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் ரகசிய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை அதிகாலையில் ஈடுபட்டனர்.   அப்போது சங்கம் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் […]

சோழர் காலக் கல்வெட்டுகளுடன் மடைத்தூண்கள் கண்டுபிடிப்பு…

    புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு:      புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு மேற்கொண்ட முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் மு. பரமசிவம் அவ்வூர்க் குளத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் அமைந்த இரண்டு தூண்களைக் கண்டறிந்தார். அவர் அளித்த தகவலால் அக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு.நளினியும் ஆய்வாளர் அ. செல்வியுடன் திம்மயம்பட்டித் தூண்களை ஆராய்ந்தனர். மாங்குடி […]

இன்றைய ராசி பலன்கள் – 22-02-2020 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை அஸ்வினி : நன்மை உண்டாகும். பரணி : அனுசரித்து செல்லவும். கிருத்திகை : ஆதரவு கிடைக்கும். […]